அமெரிக்க தாக்குதலில் அல் கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர் பலியானதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க  கடற்படை தளத்தை குறிவைத்து அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்தியது. அந்தவக்யில் அரேபிய தீபகற்பத்தில் அல் கொய்தா அமைப்பை நிறுவியவரும், அல் கொய்தா  இயக்கத்தின் துணை தலைவருமான காசிம் அல் ரமி, அமெரிக்கா நடத்திய பதில் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்து தெரிவித்துள்ளது.


கடந்த 2009-ஆம் ஆண்டு அல்-கொய்தாவின் ஏகியூஏபி என்னும் பிரிவு தொடங்கப்பட்டது. அமெரிக்கா தலைமையிலான படைகள் உள்பட அனைத்து மேற்கத்திய நாடுகளை முடிவுக்கு கொண்டுவர இது இயங்கி வந்தது. 


இந்நிலையில் அமெரிக்க தாக்குதலில் அல் கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர் பலியானதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதல் எப்போது நடைபெற்றது எந்த சூழலில் நடைபெற்றது என்பது பற்றி எந்த தகவலையும் கூறப்படவில்லை.