ஜெனீவா: சீனா இன மற்றும் மத சிறுபான்மையினரை கொடுமைபடுத்துவதை அமெரிக்கா வெள்ளிக்கிழமை (மார்ச் 12) கண்டனம் செய்தது. சின்ஜியாங்கில் முஸ்லீம் உய்குர்களுக்கு எதிராக நடக்கும் மனிதகுலத்திற்கு ஆகாத கொடூரங்களும் இனப்படுகொலைகளும், திபெத்தில் போடப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளும் இதில் அடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த வாரம் அலாஸ்காவில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வேங் யி இன்-நை சந்திக்கவுள்ள அமெரிக்க (America) வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன், உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் பற்றி பேசுவார் என கூறப்பட்டுள்ளது.


மேற்கு பிராந்தியத்தில் உள்ள உய்குர் மற்றும் பிற முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ததாக அமெரிக்கா சார்பில் வந்துள்ள குற்றச்சாட்டுகளை சீனா நிராகரிக்கிறது. அங்கு 1 மில்லியனுக்கும் அதிகமானோர் தடுப்பு முகாம்களில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


"சிஞ்சியாங்கில் (Xinjiang) மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை மற்றும் திபெத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட இன மற்றும் மத சிறுபான்மை குழுக்களின் உறுப்பினர்களை சீனா துஷ்பிரயோகம் செய்வதை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று மார்க் கஸ்ஸேர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தார்.


ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான சீனாவின் தூதர் சென் சூ, ஒரு உரையில் ஜின்ஜியாங்கை நேரடியாகக் குறிப்பிடாமல், மனித உரிமை பிரச்சினைகளை அரசியல்மயமாக்குவதை தனது நாடு எதிர்ப்பதாகக் கூறினார்.


ALSO READ: போர்களத்தில் வெல்ல முடியாத சீனா, இந்தியா மீது நடத்திய சைபர் தாக்குதல்...!!!


சீனா உட்பட 64 நாடுகளின் சார்பாக பேசிய கியூபா, சின்ஜியாங் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி என்றும், சின்ஜியாங் தொடர்பான பிரச்சினைகளைப் பேசி சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் அரசியல் காரணங்காளுக்காக சீனாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதை மற்ற நாடுகள் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியது.


பிரிட்டனின் தூதர் ஜூலியன் ப்ரைத்வைட் மன்றத்திடம், “சிஞ்சியாங்கில் விரிவான மற்றும் முறையான மனித உரிமை மீறல்களால் நடந்து வருவதால் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இங்கு கொத்தடிமைத்தனமும், கட்டாய பிறப்பு கட்டுப்பாட்டு செயல்முறைகளும் நடப்பதாக நம்பகமான அறிக்கைகள் தெரிவிக்கின்றன” என்றார்.


ஜின்ஜியாங்கில் சீனா அமைத்த வளாகங்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் முறியடிக்க அங்குள்ள மக்களுக்கு தொழில்துறை பயிற்சிகளை அளிப்பதாக அந்நாடு கூறுகிறது. கொத்தடிமை முறைகளும் மனித உரிமை மீறல்களுக்கான குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்ற வதந்திகள் மற்றும் அவதூறுகள் என்று சீன (China) வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கிறது.


இதற்கிடையில், கசாயர் மற்றும் ப்ரைத்வைட் ஹாங்காங் குறித்த கவலைகளை எழுப்பினர். ஜாமீன் கோரி 21 ஆர்வலர்கள் விடுத்த கோரிக்கைகளை வெள்ளிக்கிழமை (மார்ச் 12) நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து இந்த கவலை எழும்பியுள்ளது.


"ஜனநாயக ஆர்வலர்கள் தங்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக ஹாங்காங் அதிகாரிகள் அவர்களை கைது செய்ததை நாங்கள் கண்டிக்கிறோம். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோருகிறோம்” என்று கஸ்ஸேர் கூறினார்.


மொத்தத்தில் சீனா தனது நாட்டிலும் தனது அண்டை நாட்டிலும் செய்யும் அட்டூழியங்களும் அத்துமீறல்களும் உலகத்தின் பார்வையை உறுத்தத் துவங்கிவிட்டன. சீனா இவற்றுக்கு விரைவில் பதிலளிக்கவேண்டி இருக்கும்.


ALSO READ: சீனா தன் அட்டூழியங்களை அடக்கிக்கொள்ளாவிட்டால், அடக்கப்படும்: Joe Biden


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR