வாஷிங்டன் டி.சி: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் கிழக்கு லடாக்கில் நிலவும் கடும் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா இந்தியாவின் தோளைத் தட்டிக் கொடுத்துள்ளது. இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சரக்கு விமானமான சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ்-க்கு (C-130J Super Hercules) உதிரி பாகங்கள் கொடுப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்காக, இரு நாடுகளும் 90 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய-அமெரிக்க மூலோபாய உறவுகளை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்க Defense Security Agency தெரிவித்துள்ளது. இதன் மூலம், இரு நாடுகளும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றில் முன்னேறும்.


இந்த ஒப்பந்தத்தின்படி, சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தை பழுது பார்க்க அமெரிக்கா இந்தியாவுக்கு உதவும். அதோடு, இந்த விமானத்திற்கு தேவையான உதிரி பாகங்களும் வழங்கப்படும். AN/ALR-56M வகையின் மேம்படுத்தப்பட்ட அட்வான்ஸ் ரேடார் எச்சரிக்கை அமைப்பு, 10 இலகுரக இரவு பார்வை தொலைநோக்கிகள், 10 இரவு பார்வை கண்ணாடி, ஜி.பி.எஸ் உட்பட பல பொருட்களுக்கு இந்தியா கொள்முதல் ஆர்டரை கொடுத்துள்ளது.


சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸுக்கு உதிரி பாகங்கள் மற்றும் சேவை வசதிகள் கிடைத்த பிறகு, இந்திய விமானப்படையின் இந்த விமானங்கள் எந்த நேரத்திலும் செயல்பட தயாராக இருக்கும். இதனால்  நம் நாட்டை சீண்டிப் பார்க்க நினைப்பவர்களுக்கும் தயக்கம் ஏற்படும்.  


அமெரிக்க சட்டத்தின்படி, மற்ற நாடுகளுடனான பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, அமெரிக்க எம்.பி.க்கள் எந்தவொரு ஒப்பந்தத்தையும் 30 நாட்களுக்குள் மறுபரிசீலனை செய்யலாம். தகவல்களின்படி, அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தின்படி, Lockheed Mortgage Company என்ற நிறுவனம் இந்தியாவுக்கு சேவைகளை வழங்கும் பொறுப்பேற்கும்.


Read Also | Nepal: 5000 டாலர் health insurance இருந்தா இமயமலைக்கு போகலாம்...இல்லைன்னா No Entry


சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தை பயன்படுத்தும் 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.  இந்திய விமானப்படையில்    சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் ஐந்து இருக்கின்றன. ஆறாவது விமானத்தை வாங்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.


சி -130 ஜே விமானம் கனரக உபகரணங்களை ஏற்றிக் கொண்டு செல்லக் கூடியவை. வேறு எந்த விமானமும் தரையிறங்க முடியாத உலகின் அணுக முடியாத பகுதிகளிலும் அவற்றை தரையிறக்க முடியும். இதற்கு உதாரணமாக 2013 ஆம் ஆண்டில், உலகின் மிக உயரமான ஓடுபாதையான தெளலத் பாக் ஓல்டியில் (Daulat Beg Oldi) சி -130 ஜே விமானம் தரையிறக்கப்பட்டதை நிறுவனம் குறிப்பிட்டது. இது இந்திய விமானப்படையின் மிகவும் துணிச்சலான நடவடிக்கையாகும். 16 ஆயிரம் 614 அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த ஓடுபாதையில் இறங்குவதன் மூலம், இந்தியா தனது பாதுகாப்பை தெளலத் பாக் ஓல்டியில் பலப்படுத்தியது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR