Afghanistan: ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் கொலைவெறி ஆட்டம் போட்டு வரும் நிலையில், ​​தலைநகர் காபூல் 90  நாட்களில் கைப்பற்றப்படும் என அமெரிக்க உளவுத்துறையை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் அறிக்கையில் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், தலிபான்களை கட்டுப்படுத்த முடியாமல்  ஆப்கான் ராணுவம் திணறி வருகிறது.  இதை அடுத்து காபூல் எவ்வளவு காலம் தாங்க முடியும் என்பது குறித்த அமெரிக்க உளவுத் துறை அறிக்கை  இன்னும் 3 மாதங்களில் ஆப்கானிஸ்தான் காபுலை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றி விடுவார்கள் என எச்சரித்துள்ளது.  


அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் இது குறித்து கூறுகையில், தாலிபான்கள் நடத்தி வரும் தாக்குதல்கள் 2020 ஆம் ஆண்டு உடன்படிக்கைக்கு எதிரானவை என்றும் தலிபான்கள் சமாதான உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டு, சண்டை நிறுத்தத்திற்கு உறுதியளித்தனர் என கூறினார்.


ALSO READ | தாலிபான்கள் வசமாகும் ஆப்கான்; ஒன்று செய்ய முடியாது என கை விரிக்கும் அமெரிக்கா.!


மலைகளால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள காபூல் நகரத்தில், அனைத்து வகையான வழிகள் மூலம் நகரத்தில் இருந்து தப்பி ஓடுவதால் பெரும் மக்கள் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேற்கத்திய பாதுகாப்பு துறை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது. தற்கொலைப் படையினர் தூதரகத்திற்குள் நுழைந்து , தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது" என்று அவர் கூறினார்.


இப்போது, ​​வெளிநாடுகள் தங்கள் தூதரக ஊழியர்களை காபூலை விட்டு  தாயகம் அழைத்து அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சர்வதேச விமான நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.


தாலிபான்கள், தற்போது, ஆப்கானின் 65% சதவிகித பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர். புதன்கிழமை, வடகிழக்கு மாகாணமான பதக்ஷானில் உள்ள ஃபைசாபாத், தலிபான்களால் கைப்பற்றப்பட்ட எட்டாவது மாகாண தலைநகரமாகும்.


இதற்கிடையில், தலிபான்கள் நாடு முழுவதும் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நிலையில், ஆப்கானில் உள்ள தற்போதையை தலைமுறையினர், ஆப்கானிஸ்தானின் பெண்களின் உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் மிகவும் பாதிக்கப்படும் என கவலை வெளியிட்டுள்ளனர்.


ALSO READ | தாலிபான்களுக்கு பயங்கரவாதிகளை சப்ளை செய்கிறார் இம்ரான்கான்: ஆப்கான் அரசு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR