புதுடெல்லி(New Delhi): தன்னலம் நிறைந்த நோக்கங்களுடன் தன் சதி வேலைகளால் உலக நாடுகளுக்கு கேடு விளைவித்து வரும் சீனா(China) இப்போது நான்கு பக்கங்களிலிருந்தும் சூழப்பட்டு வருகிறது. சீனாவின் தீங்கு விளைவிக்கும் எண்ணம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது சீனாவுடனான வர்த்தக உறவை முறித்துக்கொண்டுள்ளன. இன்னும் பல நாடுகள் இந்த நடவடிக்கையை எடுக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இந்திய அரசாங்கமும் இந்த திசையில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் உள்ளது. பல சீன மொபைல் செயலிகளை (China Apps) தடை செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவும் (America) தனது பாதுகாப்பு உபகரணங்களுக்கான தொழில்நுட்ப பகிர்வை தடை செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகவல்களின்படி, அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஹாங்காங்காங் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதாக சீனா அறிவித்துள்ள நிலையில் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ (Mike Pompeo) இந்த கட்டுப்பாடுகளைப் பற்றி  அறிவித்தார்.


ALSO READ: ஆட்டம் காணும் நேபாள பிரதமரின் பதவி, ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக இந்தியா மீது குற்றச்சாட்டு


அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் ட்வீட்:
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இது குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். ஹாங்காங்கிற்கு, இரட்டை பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா இன்று முதல் தடை செய்யப்போகிறது என்று அவர் தனது ட்வீட்டில் கூறியுள்ளார். பெய்ஜிங் ஹாங்காங்கை ஒரே நாடு, ஒரே அமைப்பு என்ற வரையறைக்குள் கருதினால், அமெரிக்காவும் அதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஹாங்காங்கின் சுதந்திரத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகமும் ஹாங்காங் தொடர்பான தனது கொள்கைகளை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. இனி பழையபடி அல்லாமல், இந்த உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பத்தைப் பெற பலவித கெடுபிடிகள் இருக்கும்.


ஹாங்காங்கிற்கான தனது பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான வழங்கலை அமெரிக்கா தடை செய்வதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. ஹாங்காங் முழுவதுமாக சீன ஆட்சியாளர்கள் மற்றும் ராணுவத்தின் பிடியில் வந்துவிட்டால், தான் செய்யும் பாதுகாப்பு உதவி மூலம் சீன ஆயுத வலிமை அதிகரித்து அது தனக்கோ பிற நாடுகளுக்கோ கேடு விளைவிக்கக்கூடாது என்பதில் அமெரிக்கா திட்டவட்டமாக உள்ளது.


மொத்தத்தில், ஹாங்காங் (Hongkong), தாய்வான்(Taiwan) என தொடர்ந்து சீனா தன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து வருவதை, பிற உலக நாடுகள் கவனித்தும் வருகின்றன, அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்தும் வருகின்றன. 


ALSO READ:  சீனா  இப்போது பூட்டானில் நிலத்தை சொந்தம் கொண்டாடுகிறது; தொடரும் அத்துமீறல்