சீனா இப்போது பூட்டானில் நிலத்தை சொந்தம் கொண்டாடுகிறது; தொடரும் அத்துமீறல்

தென் சீனக் கடலில் இருந்து லடாக் வரை சொந்தம் கொண்டாடி வரும் சீன டிராகன், இப்போது பூட்டானில் உள்ள ஒரு புதிய நிலத்திற்கு உரிமை கோரியுள்ளது. 

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jun 30, 2020, 07:58 AM IST
சீனா இப்போது பூட்டானில் நிலத்தை சொந்தம் கொண்டாடுகிறது; தொடரும் அத்துமீறல்
Photo: Reuters

திம்பு: தென் சீனக் கடலில் இருந்து லடாக் வரை சொந்தம் கொண்டாடி வரும் சீன (China) டிராகன், இப்போது பூட்டானில் உள்ள ஒரு புதிய நிலத்திற்கு உரிமை கோரியுள்ளது. உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலின் 58 வது கூட்டத்தில், பூட்டானில் உள்ள சாகடெங் வனவிலங்கு (Sakteng Wildlife Sanctuary) சரணாலயத்தின் நிலம் "சர்ச்சைக்குரியது" என்று சீனா விவரித்தது. இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை "எதிர்க்க" முயன்றது. சீனாவின் நடவடிக்கையை பூட்டான் (Bhutan) கடுமையாக எதிர்த்ததுடன், இந்த நிலம் எங்கள் நாட்டுடன் ஒருங்கிணைந்த பகுதி என திட்டவட்டமாக கூறியுள்ளது.

பிற செய்தி | LAC பகுதிக்கு தற்காப்பு கலை பயிற்சியாளர்களை அனுப்பும் சீனா.. தயார் நிலையில் இந்தியா

சீனாவின் கூற்றுக்கு மாறாக, முந்தைய காலத்தில் சரணாலயம் நிலம் தொடர்பாக ஒருபோதும் சர்ச்சை ஏற்படவில்லை என்பதே உண்மை. இருப்பினும், பூட்டானுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லை இல்லை. சீனாவின் இந்த மோசமான நடவடிக்கையை பூட்டான் கடுமையாக எதிர்த்தது. சீனாவின் இந்த கூற்றை பூட்டான் ஆட்சேபித்தது, "சாகடெங் வனவிலங்கு சரணாலயம் (Sakteng Wildlife Sanctuary) பூட்டானின் ஒருங்கிணைந்த மற்றும் இறையாண்மை கொண்ட பகுதியாகும்." எனவும் கூறியது. 

ஊடக அறிக்கையின்படி, இந்த முழு சர்ச்சையிலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த வனவிலங்கு சரணாலயம் எந்தவொரு உலகளாவிய நிதியுதவியின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. இந்த சரணாலயத்திற்கு முதன்முறையாக பணம் கொடுக்க வந்தபோது, ​​சீனா அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நிலத்தில் தனது கோரிக்கையை வைத்தது. சீனாவின் எதிர்ப்பிற்குப் பிறகும் இந்த திட்டத்திற்கு சபை ஒப்புதல் அளித்தது.

பிற செய்தி | சீனா, நேபாளத்தை அடுத்த தற்போது பூட்டானும் இந்தியாவின் தலைவலியாக மாறுகிறதா?

உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (Global Environment Facility Council) கவுன்சிலில் சீனாவுக்கு ஒரு பிரதிநிதி இருக்கிறார். ஆனால் ​​பூட்டானுக்கு நேரடி பிரதிநிதி இல்லை. உலக வங்கியில் பூட்டான் நாட்டை இந்தியாவின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அபர்ணா சுப்பிரமணி (Aparna Subramani) பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாட்டிற்கான பிரதிநிதி பொறுப்பில் உள்ளார். 

முன்னதாக ஜூன் 2 அன்று, ஒவ்வொரு திட்டமும் விவாதிக்கப்பட்டபோது, ​​சீன கவுன்சில் உறுப்பினர் ஜாங்ஜிங் வாங் அதை எதிர்த்தார். இந்த ஆட்சேபனை தாக்கல் செய்யுமாறு கேட்டார்.