Bizarre News: உலகம் முழுவதும் திருமணம் தொடர்பான பல சடங்குகள் மற்றும் மரபுகள் உள்ளன. சில ஒன்றுக்கொன்று ஒத்துப்போகும் வகையில், சில வேறுபட்டவையாகவும் உள்ளன. உதாரணமாக, இந்தியாவில் மணமகள் ஊர்வலத்தில் மணமகனுடன் வருவார். அப்போது மணமகளுடன், அவளுடைய சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அவளை மண்டபத்தின் மணமேடைக்கு அழைத்துச் செல்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுபோலவே வெளிநாட்டுத் திருமணத்தில் மணமகளின் தோழி, திருமண உறுதிமொழி நடக்கும் இடத்திற்கு அழைத்துச்செல்வார்கள். அதாவது மணப்பெண்ணுக்குத் தனி முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில், ஒரு அமெரிக்கப் பெண்ணுக்கு திருமண நிகழ்வில் மணமகள் தோழி என்ற பாத்திரத்தை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஐடியா வந்துள்ளது. அதன்மூலம்,  அவர் கோடீஸ்வரராகியுள்ளார். மணப்பெண் தோழியாக பணிபுரியும் நியூயார்க்கில் வசிக்கும் ஜேன் கிளான்ஸைப் பற்றி இங்கே முழுமையாக காணலாம்.


மணப்பெண் தோழி...


திருமண விழாவிற்கு மணப்பெண் தோழியை முன்பதிவு செய்வதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இந்தக் கேள்வியைப் படிக்க உங்களுக்குச் சற்று சங்கடமாக கூட இருக்கும். உண்மையில் விஷயம் கொஞ்சம் பழையது என்றாலும், இது 'கொஞ்சம் வித்தியாசமானது' ஐடியாவும் கூட. ஏனென்றால் ஜேனின் இந்த அருமையான யோசனை தனித்துவமானது மற்றும் ஒரு தொழில்முறை மணப்பெண் தோழியாக தன்னை மாறுவதற்கான தனது விருப்பத்தை தொழிலாக தொடங்கினார், இந்த தொழில் இதுவே முதல் முறையாகும். இதனை அவர் தொழில்முனைவோருக்கான முன்னெடுப்பாகவும் முன்வைக்கிறார்.


மேலும் படிக்க | ரஷ்யாவைப் போலவே போர் தொடுக்கத் தயாராகிறாரா கிம் ஜாங் உன்? அதிர்ச்சித் தகவல்!


எப்போதும் இருக்கும் தேவை


ரேஷன் கடை, பள்ளி, கல்லூரி என்பது எப்போதும் திறந்தே இருக்கக் கூடியது, மூடவே முடியாதது. அதேபோல, என்ன நடந்தாலும் திருமணங்களும் நின்றுவிடுவதில்லை. அதாவது திருமணங்களை நடத்துபவர்களுக்குக் கூட வேலைப் பற்றாக்குறை இருக்காது. இப்போது திருமண திட்டமிடுபவராக தனது வாழ்க்கையைத் தொடங்க அவரிடம் அதிக பணம் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நண்பர்கள் இல்லாதவர்களோ, நண்பர்கள் இருந்தும் திருமணத்திற்கு வர முடியாதவர்களோ தங்கள் குறையைப் போக்கிக் கொண்டு கை நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைத்தார்.


மணப்பெண்ணுக்கு அதிக தேவை
 
ஜேன் தனது மகிழ்ச்சியான இயல்பு, புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்றவர் என கூறப்படுகிறது. மக்கள் அவரை மூளையும், அழகும் நிறைந்த பெண் என்றே அழைக்கிறார்கள். தனது தொழிலை ஊடகம் ஒன்றுக்கு விவரித்த அவர், முக்கியமாக 3 காரணங்களுக்காக பணியமர்த்துவதாக கூறினார். முதலாவதாக, சில வாடிக்கையாளர்கள் தங்கள் தோழிகள் மிகவும் வியத்தகுவர்கள் என்று நினைக்கிறார்கள், இரண்டாவதாக, அவர்களுக்கு நண்பர்கள் இல்லை, மூன்றாவதாக, அவர்கள் விரும்பினால் கூட தங்களைச் சுற்றியுள்ள நண்பர்களைச் சேர்க்க முடியாத சூழ்நிலையில் அவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்.


ஒரு நாளுக்கு ஒரு லட்சம்


ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வரை பெறுவதாக ஜேன் கூறினார். மணப்பெண்ணாக மாறுவதற்கான இந்த வேலையில், போனஸாக அங்கு உணவும் மதுபானமும் இலவசம். ஜேன் தனது வேலையைப் பற்றி மோசமாகக் கருதும் ஒரே விஷயம் என்னவென்றால், மணப்பெண்ணான பிறகு, மணப்பெண்ணுடனான நட்பைத் தொடர விரும்பினால், அவரால் அதைத் தொடர முடியாது. பல சமயங்களில் தனது வாடிக்கையாளர்கள் மிகவும் அருமையான இதயம் கொண்டவர்கள். ஆனால் தனது பணியை தொழில்முறையாக வைத்துக்கொள்ள, அவர்களுக்கு மீண்டும் போன் செய்வதில்லை என்று அவர் கூறுகிறார்.


மேலும் படிக்க | உயிரியல் ஆயுதம்... அணுகுண்டு தாக்குதல்... பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ