அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒருவர், கண்ணில் காண்டாக்ட் லென்ஸ்கள் போட்டவார தூங்கியதால், அவரின் ஒரு கண்ணில் பார்வை பறியோயுள்ளது. 21 வயதான மைக் க்ரம்ஹோல்ஸ், அவரது கண்ணில் காண்டாக்ட் லென்ஸ்களை அணிந்து தூங்கிவிட்டார். அப்போது, அவரது கண்களில் வளர்ந்த ஒரு அரிய சதை உண்ணும் ஒட்டுண்ணி, கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் விளைவாக ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது. அவர் ஒருநாள், தனது வேலைகளை முடித்துவிட்டு, அசதியாக இரவில் தூங்கிவிட்டார். மேலும், அவர் தூங்கும்போது, லென்ஸை கண்ணில் இருந்து அகற்ற மறந்துள்ளார். சுமார் ஏழு வருடங்களாக காண்டாக்ட் லென்ஸ்களை அவர் அணிந்து வருவதாகவும், லென்ஸை அகற்ற மறந்தால் கண் சிவப்பாவது, கண்ணில் தொற்று ஏற்படுவது அவருக்கு புதிதல்ல என்றும் தெரிவிக்கிறார். 


இருப்பினும், இந்த முறை நிலைமை மோசமாக மாறியது. மைக்குக்கு வலது கண்ணில் அகந்தமோபா கெராடிடிஸ் (acanthamoeba keratitis) இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்,"மைக் தனது காண்டாக்ட் லென்ஸ்களை அணிந்து கொண்டு தூங்கிவிட்டார், மேலும் அகாந்தமோபா கெராடிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இது ஒரு அரிய சதை உண்ணும் ஒட்டுண்ணியாகும். இது கண்களில் நுழைந்து திசுக்களை சாப்பிடத் தொடங்குகிறது" என்றார். 


மேலும் படிக்க | Marburg Virus: ஆப்பிரிக்க நாட்டில் வேகமாக பரவும் மார்பர்க் வைரஸ்! WHO விடுத்துள்ள எச்சரிக்கை!


அவரது வலது கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, அவர் 50 நாட்களுக்கும் மேலாக வேலை செய்யவோ, படிக்கவோ அல்லது பொதுவாக தனது இயல்பான வாழ்க்கையை வாழவோ முடியாமல் இருளில் இருந்ததாக மைக் கூறினார்.


மைக் தனது பிரச்னை காரணமாக, GoFundMe என்ற நிதியுதவி பக்கத்தை உருவாக்கி, மற்ற காண்டாக்ட் லென்ஸ்கள் அணிபவர்களுக்கு விழிப்புணர்வைப் பரப்பவும், பலவீனப்படுத்தும் ஒட்டுண்ணியை எதிர்த்துப் போராட நிதி திரட்டி வருகிறார். அவர் 10 ஆயிரம் அமெரிக்க டாலரை இலக்காக நிர்ணயித்துள்ள நிலையில், தற்போது அவரால் 1,000 அமெரிக்க டாலர்களை நெருங்க முடிந்துள்ளது.



கடந்த பிப்ரவரி 7 அன்று உருவாக்கப்பட்ட நிதியுதவி பக்கத்தில், மைக் தனக்கு என்ன நடந்தது என்று விவரித்தார். "நான் கண் விழித்து பார்த்தேன், அது மோசமான ஒவ்வாமை (Allergy) அல்லது இளஞ்சிவப்பாக கண் சிவந்திருப்பதை உணர்ந்தேன். என் கண்ணில் HSV1 இருப்பதாக தவறாக கண்டறியப்பட்டது.


ஆனால் ஐந்து வெவ்வேறு கண் மருத்துவர்கள் மற்றும் 2 கார்னியா நிபுணர்களின் பரிசோதனக்கு பிறகு, என் கண்ணில் அகந்தமோபா கெராடிடிஸ்  (acanthamoeba keratitis) என்ற மிக அரிதான ஒட்டுண்ணி இருப்பது கண்டறியப்பட்டது. எனக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது மிகவும் வேதனையானது" என்றார். இருப்பினும் அவருக்கு ஒரு கண்ணில் முற்றிலும் பார்வை இல்லை என்றும் கூறினார்.


எனவே, இனி யாரும் மறந்தும்கூட கண்ணில் காண்டாக்ட் லென்ஸ்களை வைத்து தூங்கிவிட வேண்டாம் எனவும் கண்ணில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் என்பதுதான் மைக்கின் கதை மற்றவர்களுக்கு சொல்லும் பாடமாகும். 


மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கும் கொள்ளு... டாப் 5 பயன்கள் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ