Health Benefits Of Horse Gram: பயிறு வகைகளில் உளுந்து, பச்சைப்பயறு அதிகமாக அறியப்படும் வேளயைில், கொள்ளு பயிறு குறித்து அதிகம் பேருக்கு தெரியாது. ஆனால், கொள்ளு பயிரில் அதிக சத்துகள் அடங்கியுள்ளன.
கொள்ளு பல இடங்களில் பல பெயர்களில் அறியப்படுகிறது. இது பொதுவாக, குதிரைகள், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கப்படுகிறது. எனவே, இதை ஆங்கிலத்தில், 'Horse Gram'என்றும் அழைக்கின்றனர். அதிக புரதச்சத்து நிறைந்த பயிறு, கொள்ளுதான். இது அதிக ஆற்றல் கொண்டது, எனவே பந்தயங்களுக்கு முன் குதிரைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
யுஎஸ் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் கொள்ளு பயிறை, எதிர்காலத்திற்கான நம்பிக்கைக்குரிய உணவு ஆதாரமாக அடையாளம் கண்டுள்ளது. லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த கொள்ளு பயிறு கி.மு., 2 ஆம் நூற்றாண்டில் வளர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. வறண்ட சூழல்களில் செழித்து வளரும் அதன் சிறப்புமிக்க திறன், ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
மேலும் படிக்க | தொப்பை தொங்குவதை சீக்கிரம் குறைக்க ஒரே வழி..!
கொள்ளு ஏழையின் உணவாக பார்க்கப்படுவதால், பலரும் இதனை சாப்பிட முன்வருவதில்லை. ஆனால், இதனை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து அறிந்துகொண்டால், அதனை உணவில் எடுத்துக்கொள்ள பலரும் முன்வருவார்கள்.
கொள்ளு பயிறின் ஆரோக்கிய குணங்கள்:
1. பாரம்பரிய மருத்துவம்
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் ஒவ்வாமை, சிறுநீர்ப் பிரச்சனைகள், மஞ்சள் காமாலை, வயிற்றுப் புண், மூல நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் கொள்ளு பொடி பேருதவியாக இருக்கிறது. சளியைப் பிரித்தெடுக்கவும், காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் இது நன்மை பயக்கும்.
2. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது
பதப்படுத்தப்படாத, கொள்ளு விதைகளை (பச்சையாக, முளைக்காதவை) உணவாகத் தொடர்ந்து சாப்பிடுவது, கார்போஹைட்ரேட் செரிமானத்தை குறைத்து, இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதன் மூலம் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கும் என்று இந்திய இரசாயன தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
3. உடல் எடை குறைப்பு
கொள்ளு விதைகள் கொழுப்பை எரிப்பதாக செயல்படும் இயற்கையான குணங்களைக் கொண்டுள்ளன. இது எல்டிஎல் கொழுப்பைக் குறைத்து, எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கும். கொள்ளு விதைகள் உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு திசுக்களை நேரடியாக தாக்கும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இது உடல் கொழுப்பை கரைப்பதில் சாதகமானது மற்றும் உடலுக்கு சரியான வடிவத்தை அளிக்கிறது.
4. விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்துகிறது
கொள்ளு பயிறில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் அமினோ அமிலங்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும். இந்த தாதுக்கள் ஆண் இனப்பெருக்க அமைப்பில் சாதகமாக செயல்படுகின்றன. அந்த உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. அதே நேரத்தில் அமினோ அமிலங்கள் நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன. இது விந்தணுக்களின் அதிகரிக்க உகந்ததாக உள்ளது.
5. சிறுநீரக கற்களை குணப்படுத்துகிறது
உடலில் கால்சியம் பாஸ்பேட் உப்புகள் படிகமாக்கப்படுவதால் சிறுநீரக கற்கள் ஏற்படுகின்றன. கொள்ளு விதைகள், சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளுடன் உட்செலுத்தப்பட்டு, இந்த உப்பு கடினப்படுத்தும் செயல்முறையைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், ஆரோக்கியமான சிறுநீரக செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் இருந்து தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சிறுநீரக கோளாறுகளை உடனுக்குடன் சரிசெய்வதில் கொள்ளு ஒரு ஆற்றல்மிக்க மூலப்பொருளாகவும் உள்ளது.
எனவே, முளைத்த அல்லது வேகவைத்த விதைகளின் வடிவில், அரைத்த பொடியில் தயாரிக்கப்படும் ஆரோக்கிய பானமாகவும், பயிறு, சூப் மற்றும் சாலட் போன்ற பாரம்பரிய இந்திய உணவு வகைகளிலும், உலகளவிலும் பரவலாக கொள்ளு பயிறு உட்கொள்ளப்படுவதில் ஆச்சரியமில்லை.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Cholesterol: இப்படி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும்: இதய நோய் அபாயமும் இருக்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ