அமெரிக்காவின் ஓமஹா நகரில் ஆசிரியராக இருப்பவர் பெய்டன் ஸ்டோவர் (23). இவருக்கு திருமணமாகிவிட்டது. இவர் சில நாள்களுக்கு முன்னர், தனது உடற்சோர்வு குறித்து ஆலோசனை பெற மருத்துவரை சென்று சந்தித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெய்டன் முதலில், வேலைப்பளு காரணமாகதான் தனக்கு உடற்சோர்வு இருப்பதாக நினைத்துள்ளார். ஆனால், தனது உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்துள்ளார். அவரின் கால் கடுமையாக வீங்கியதாக கூறியுள்ளார். 


அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் கருவுற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், மீண்டும் ஒரு பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். அதில், அவரின் கர்ப்பம் உறுதியாகியுள்ளது. 


மேலும் படிக்க | நேற்று கர்ப்பம்... இன்று குழந்தை - அதிர்ச்சியடைந்த தாய்!


அந்த பரிசோதனையில் அவர் கர்ப்பமடைந்தது மட்டுமில்லாமல், அவரின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட அன்று இரவு அவருக்கு குழந்தை பிறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 


ப்ரீக்ளாம்ப்சியாவால் (Preeclampsia) பெய்டன கடுமையாக பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது பேருக்காலத்தின் போது, கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தி, உயர் ரத்த அழுத்தம், மற்ற உறுப்புகளை பாதிப்பது போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 


அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு தாயும், சேயும் உயிரும் காப்பற்றுள்ளது. குழந்தை பிறப்பு தனக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்தியதாக பெய்டன் தெரிவித்துள்ளார். 


பெய்டனுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. காஷ் என பெயரிடப்பட்ட அக்குழந்தை 10 வாரங்களுக்கு முன்பாகவே பிறந்துள்ளது. மேலும், குழந்தையின் எடை சுமார் 2 கிலோவுக்கும் குறைவாக தான் (4 Pounds) இருந்துள்ளது. 


மேலும் படிக்க | Uric Acid இந்த வயதில் அதிரடியாய் அதிகரிக்கும்: கட்டுப்படுத்த இந்த உணவுகள் உதவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ