சூதாட்டத்திற்கு கம்பெனி பணம்... ரூ. 82 கோடியை காலி செய்த பெண்!
சொகுசு வாழ்க்கைக்கும், சூதாட்டத்திற்கும் ஒரு பெண், அவர் வழக்கறிஞராக பணிபுரியும் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 82 கோடி மதிப்பிலான பணத்தை செலவழித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆரஞ்சு கவுண்டியைச் சேர்ந்த சாரா ஜாக்குலின் கிங் என்பவர் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் கடன் வழங்கும் நிறுவனமான எல்டிஆர் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார்.
லாஸ் வேகாஸ் ஸ்டிரிப்பில் நகரில் அவர், ஆடம்பரமான வாழ்க்கையை வாழ நிறுவனத்தின் பணத்தைப் பயன்படுத்தியதாக கூறி, சாரா மீது நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது. வழக்கறிஞர் சாரா, கிளப் ரிசார்ட்டில் நீண்ட காலம் வாழ்ந்ததாகவும், அங்கு வாரம் முழுக்க 24 மணிநேரமும் சூதாடியாதாகவும், நிறுவனம் குற்றம் சாட்டியது. அதாவது, லாஸ் வேகாஸ் கேசினோவில் பார்ட்டிக்காக சாரா, தனது நிறுவனத்தின் பணத்தில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.82 கோடி) பணம் செலவழித்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | டாட்டூ சாதனை... உடல் முழுவதும் டாட்டூ குத்திக் கொண்டுள்ள தம்பதிகள்!
எழுத்துப்பூர்வ ஒப்பந்தங்களின் மீறல், மோசடி மற்றும் சிவில் திருட்டு ஆகியவை வழக்குக்கான காரணங்களாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் நிறுவனம் சாராவிற்கு, தொடர்ச்சியான கடன்களை நீட்டித்ததாகவும், அது மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய கடன் தொகையாகும் என நிறுவனம் கூறுகிறது.
சாரா தனது பெயரில் 11.98 அமெரிக்க டாலர் (ரூ. 1,000) மட்டுமே வைத்திருப்பதற்கான ஆதாரத்தை அளித்துள்ளார். இதுகுறித்து சாரா, அனைத்து நிதியையும் செலவழித்துவிட்டதாகவும், தன் பெயருக்கு பணம் இல்லை என்றும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
LDR நிறுவனத்திற்கு எதிரான மோசடியில் கிங்கின் முன்னாள் கணவர் மொராக்கோவிற்கு தப்பிச் சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதுதொடர்பான வழக்கில், அவரின் பெயர் சேர்க்கப்படவில்லை என்றும் சாரா மீது நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. சாரா பதிலளிக்க 20 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. அடுத்த நீதிமன்ற விசாரணை தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
மேலும் படிக்க | 5,000 ஆண்டுகள் பழமையான ஹோட்டலை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ