முன்னாள் காதலனுக்கு காதலி கொடுத்த ஷாக் - அதிர்ந்த போலீஸார்

தன்னை ஏமாற்றிய காதலனுக்கு காதலி போட்டிருந்த பிளானைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காதலில் தோல்வி அடைந்தவர்கள் ஏராளம். காதலி மற்றும் காதலர்கள் அவர்களை விட்டுச் சென்றிருக்கலாம் அல்லது அவர்களை ஏமாற்றியிருக்கலாம். இதனால், தங்களை ஏமாற்றியவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்களுக்கு இயல்பாகவே கோபம் இருக்கும்.
மேலும் படிக்க | அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்; அதிர வைக்கும் தகவல்கள்
இத்தகைய சூழலில் தங்களை ஏமாற்றியவர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று சிந்திப்பார்கள். அப்படி தான் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணும் நினைத்துள்ளார். இதற்காக முன்கூட்டியே காதலனை பழிவாங்க பலே திட்டம் ஒன்றையும் தீட்டியுள்ளார். அவரின் திட்டம் தன்னை ஏமாற்றிய காதலனை கொலை செய்ய வேண்டும். இதற்காக பிளானை பக்காவாக போட்ட அந்தப் பெண், தான் என்ன செய்ய வேண்டும்? எப்படி கொலை செய்ய வேண்டும்? என்பதை பேப்பர் ஒன்றில் எழுதி வைத்துள்ளார்.
காதலனை கொலை செய்வதற்காக கிட்டுகளையும் ரெடி செய்து வைத்துள்ளார். அந்த காதலியின் பெயர் சோபி. காதலன் பெயர் ஆதாம். 17 வயது மட்டுமே ஆன சோபி, 20 வயதான ஆதாமுடன் பழக்கமாகிறது. 2019 ஆம் ஆண்டில் தொடங்கிய காதல் திடீரென கசப்பான பகுதிக்கு சென்றுவிடுகிறது. அதாவது ஆதாம் தன்னைவிட்டு விலகுவதை அறிந்த சோபி, மன் வெதும்புகிறார். ஆதாமை சித்திரவதை செய்து கொலை செய்ய திட்டமிட்ட அவர், ஒருநாள் ஆதாமை தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் படிக்க | இலங்கை கிரிக்கெட் வீரர்கள் IPLல் இருந்து விலக வேண்டும்: அர்ஜுன ரணதுங்க
காரில் அழைத்துச் செல்லும்போது கத்தியை எடுத்து வெட்டியுள்ளார். சுதாரித்துக் கொண்ட ஆதாம், காரில் இருந்து குதித்து போலீஸூக்கு தகவல் கொடுத்துள்ளார். தவலறிந்து வந்த காவல்துறையினர் சோஃபியை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் காவல்துறைக்கு இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் சோஃபிக்கு பதிமூன்றரை ஆண்டுகள் நீதிமன்றம் தண்டனை விதித்தது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR