பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மே 31-ம் தேதியுடன் பாகிஸ்தான் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து, இதற்கான பொதுத் தேர்தல் ஜூலை 25-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 


இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் பகுதியில் நேற்று தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாங்களிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.


இந்த தாக்குதலில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் உள்பட 13 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.