ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தென்னாப்பிரிக்காவிற்கு விஜயம் செய்யும் போது அவரை கைது செய்யும் எந்தவொரு முயற்சியும் ரஷ்யாவிற்கு எதிரான போர் அறிவிப்பாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா எச்சரிக்கை விடுத்துள்ளர். ஜொகன்னஸ்பர்க்கில் சர்வதேச கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. அதில் ரஷ்ய அதிபர் கலந்து கொள்வதற்கு சில வாரங்கள் உள்ள நிலையில் சிரில் ரமபோசா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்ய அதிபர், தன் நாட்டில் இருந்துவெளியேறினால், அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court (ICC)) கைது வாரண்டின்படி கைது செய்யப்படுவார்.


தென்னாப்பிரிக்காவும் ஐசிசி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது என்பதால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கைது செய்ய உதவ வேண்டும், அந்த விஷயத்தில் தென்னாப்பிரிக்க உதவாமல் இருந்தால் வேறுவிதமான தடைகளையும், பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.


ஆனால், தென்னாப்பிரிக்கா, ஐசிசி ஒப்பந்தத்தில் இருந்தாலும் கூட, கடந்த காலத்தில் தனது கடமையை செய்ய மறுத்துவிட்டது என்பதற்கான முந்தைய உதாரணம் ஒன்று உள்ளது. 2015இல் சூடானின் அப்போதைய அதிபர் ஒமர் அல்-பஷீர், தனது நாட்டு  மக்களுக்கு எதிரான போர்க் குற்றங்களுக்காகத் தேடப்பட்டவர், தென்னாப்பிரிக்காவுக்கு வந்தபோது அவரை பாதுகாத்தது தென்னாப்பிரிக்கா.


மேலும் படிக்க | நீ எவ்வளவு பெரிய பிஸ்தாவா இருந்தா எனக்கென்ன? 19 அடி மலைப்பாம்பு வீடியோ வைரல்


பிரிக்ஸ் நாடுகளின் உறுப்பினர்களுக்கான உச்சிமாநாட்டை நடத்தும் தென்னாப்பிரிக்கா, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உயர்நிலை கூட்டத்திற்கு ரஷ்ய அதிபர் விளாமிர் புடினுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டணி பிரிக்ஸ். வளரும் பொருளாதாரங்களின் இந்த கூட்டமானது மேம்பட்ட பொருளாதாரங்களின் G7 குழுவிற்கு மாற்றாகவும் பார்க்கப்படுகிறது. 


பிரிக்ஸ் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக, ரஷ்ய அதிபர் புடின் நாட்டில் காலடி எடுத்து வைத்தால், அவரைக் கைது செய்யுமாறு அதிகாரிகளை வற்புறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கூட்டணி, நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது.


ஆனால, தேசிய பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகக் கூறி, அத்தகைய நடவடிக்கைக்கு எதிராக உறுதியாக அதிபர் ரமபோசா இருப்பதாக நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.


மேலும் படிக்க | கடற்கரையில் பிரம்மாண்ட மர்ம பொருள்... சந்திரயான்-3 உடையாதா - முழு விவரம் என்ன?


"அதிபர் புடினை கைது செய்து சரணடைய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதில் தென்னாப்பிரிக்காவுக்கு வெளிப்படையான சிக்கல்கள் உள்ளன," என்று அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஒரு பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.



"பதவியில் இருக்கும் ரஷ்ய அதிபரை கைது செய்வது போர்ப் பிரகடனமாக இருக்கும் என்று ரஷ்யா தெளிவுபடுத்தியுள்ளது. ரஷ்யாவுடன் போரில் ஈடுபடுவது நமது அரசியலமைப்பிற்கு முரணானது” என்று கூறியிருக்கும் தென்னாப்பிரிக்க அதிபர், "போரை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில்" ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் பேச்சு நடத்தும் பல ஆப்பிரிக்க நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று என்றும், திரு புடினை கைது செய்ய முயற்சிப்பது விஷயங்களை கெடுத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.


கடந்த மாதம், ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள், உக்ரைனையும் ரஷ்யாவையும் ஒன்றாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த மேற்கொண்ட நம்பிக்கைகள் தோல்வியை சந்தித்தன.  


உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைக் கண்டிக்கும் ஐ.நா பொதுச் சபை தீர்மானங்களை ஆதரிக்க ஆப்பிரிக்க நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. ரஷ்யாவிற்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவுகள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட ரஷ்ய தன்னலக்குழு, விக்டர் வெக்செல்பெர்க், தென்னாப்பிரிக்காவின் ஆளும் கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸுக்கு (ANC) மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒருவராகக் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | தண்ணி அடிச்சாலும் உடம்பு கெட்டுப் போகக்கூடாதா? பாம்பு மருந்து இருக்கு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ