Snake Farming: இந்த கிராமத்தில் ஆண்டுக்கு 30 லட்சம் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன, காரணம் கேட்டால்..கண்கள் விரியும்...
கிராமத்தில் உள்ள மக்கள் எவ்வளவு பக்தியுடன் பாம்புகளை வளர்க்கிறார்கள் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உண்மை தான்... வணங்குகிறார்கள் என தப்பாக படித்துவிட வேண்டாம். இந்தியாவில் பாம்பை கடவுளாக வணங்கி, பால் ஊற்றுவார்கள்.
ஆனால், பாம்பு வளர்ப்பதற்கு பண்ணை வைத்து, காளன் வளப்பதைப் போல சகட்டு மேனிக்கு பாம்பு உற்பத்தி பண்ணும் சீனாவின் பாம்பு வளர்ப்புத் தொழில் நல்ல லாபம் தருகிறது. அதுமட்டுமின்றி, அவர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கொடுக்கும் பாம்புகள், பல வகையான மூலிகைகளும் தயாரிக்கவும் சீனர்களுக்கு உதவுகின்றன.
சீனாவின் ஒரு கிராமத்தில் ஆண்டுக்கு 30 லட்சம் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன, விலங்குகளை வளர்ப்பது மற்றும் பராமரிப்பது போல, இந்த இடத்தில் பாம்புகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
மேலும் படிக்க | ஒரே நொடியில் பறவையை பதம் பார்த்த பாம்பு; கதி கலங்க வைக்கும் வைரல் வீடியோ
விஷப் பாம்புகள்
சீனாவின் இந்த பாம்பு வளர்ப்பு கிராமத்தின் பெயர் ஜிசிகியாவோ என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாகப்பாம்பு, விரியன் பாம்பு என பலதரப்பட்ட விஷப்பாம்புகள் இங்கு உற்பத்தியாகின்றன. இங்கு ஆண்டுக்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான பாம்புகள் உற்பத்தியாகின்றன என்று கூறப்படுகிறது.
மர்மங்கள் நிறைந்த சீனா, பாம்புகளை வளக்கும் இந்த விஷயத்தில் கூட உலகத்திலிருந்து சற்று வித்தியாசமானது தான். இங்கு கரப்பான் பூச்சி முதல் கொசுக்கள் வரை அதிக அளவில் உற்பத்தியாகின்றன என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மூன்று மில்லியனுக்கும் அதிகமான பாம்புகளின் உற்பத்தி
இதற்கு பல்வேறு நோக்கங்களும் காரணங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. உண்மையில், பாரம்பரிய மருத்துவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சீனாவில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது, மேலும் பல வகையான சிகிச்சைகளும் பாம்புகளுடன் தொடர்பு கொண்டவைகளாக இருக்கின்றன.
சீனாவின் இந்த கிராமத்தில் அனைத்து வகை பாம்புகளும் காணப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மரம் மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட சிறிய பெட்டிகளில் இவை வளர்க்கப்படுகின்றன. இந்த கிராமத்தில் சுமார் 170 குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பாம்புகளை உற்பத்தி செய்கின்றன.
மேலும் படிக்க | பாம்பு vs கீரி... வீடியோ வைரல்
பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை
பாம்புகளிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகைகள் பல நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. பாம்புகளைக் கொண்டும் பல வகையான சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. தோல் நோய்களுக்கான சிகிச்சையில் பாம்புகள் பயன்படுத்தப்படுகின்றன, அதே போல் புற்றுநோய் சிகிச்சைக்கும் பாம்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதய நோயாளிக்கு பாம்பு விஷம் கொடுக்கப்படுகிறது. பாம்பிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து குடித்தால், மது குடிப்பவர்களுக்கு உடலில் அதன் தாக்கம் ஏற்படாதாம். மது குடிப்பவர் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பார் என்பது சீன நம்பிக்கை. 1918 இல் ஸ்பானிஷ் காய்ச்சல் பரவியபோது, பாம்பு எண்ணெய் அதை குணப்படுத்துவதாக சீனாவில் கூறப்பட்டது.
பாம்பு தோட்டமும்!
அதேநேரம், வியட்நாமில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்புகளின் தோட்டமும் இருப்பதாக மற்றொரு ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இங்கு மரக்கிளைகளில் பாம்புகள் சுற்றியிருக்கின்றன. இந்த தோட்டத்தின் பெயர் டோங் டாம் பாம்புப் பண்ணை, வயல்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் எவ்வாறு வளர்க்கப்படுகின்றனவோ, அதேபோல் பாம்புகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. டோங் டாம் பாம்புப் பண்ணையிலும், பாம்புகள் மூலிகைகளாக பார்க்கப்படுகின்றன. உலகின் பல நாடுகளில் பாம்புகள் வளர்க்கப்படும் இடங்கள் இருந்தாலும், சீனாவின் இந்த கிராமம் பாம்புப் பண்ணைத் தொழிலில் முன்னணியில் உள்ளது.
மேலும் படிக்க | நீ எவ்வளவு பெரிய பிஸ்தாவா இருந்தா எனக்கென்ன? 19 அடி மலைப்பாம்பு வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ