ஆயுதம் எடுக்கும் எவரும் மக்களுக்கும் நாட்டுக்கும் எதிரி- தலீபான் செய்தி தொடர்பாளர்
![ஆயுதம் எடுக்கும் எவரும் மக்களுக்கும் நாட்டுக்கும் எதிரி- தலீபான் செய்தி தொடர்பாளர் ஆயுதம் எடுக்கும் எவரும் மக்களுக்கும் நாட்டுக்கும் எதிரி- தலீபான் செய்தி தொடர்பாளர்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2021/09/06/197112-afgan.jpeg?itok=CcFA2P4-)
ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியிலிருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.
காபூல் : ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியிலிருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.
இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகளில் தீவிரமாக இறங்கின. இதற்கிடையில் தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் ஒவ்வொரு நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர். மக்கள் மட்டுமல்லாது அரசியல் கட்சி தலைவர்கள், MP-க்கள் என பலர் வெளிநாடுகளில் தஞ்சம் தேடுகின்றனர்.
இருப்பினும் இவற்றையெல்லாம் எல்லாம் கண்டு கொள்ளாமல் தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். ஏற்கனவே இது சம்பந்தமாக முடிவு எடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு தலீபான் தலைவர்களையும் சந்தித்து பேசி வந்தனர். இதனைத்தொடர்ந்து ஆப்கான் தலைநகர் கந்தகாரில் தலீபான் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரான் நாட்டிலுள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர தலீபான்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலீபான் இயக்கத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் பதவி வழங்கும் வகையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. தலீபான்களின் தலைவரான முல்லா 'ஹைபத்துல்லா அஹுன்ஸாடா' புதிய அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராகவும் இருப்பார் என்று தலீபான்களின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் 'அனாமுல்லா சமங்கனி' தகவல் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அரசினை அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், புதிய அரசு பதவி ஏற்கும் விழாவுக்கு பாகிஸ்தான், துருக்கி, கத்தார், ரஷியா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு தலீபான்கள் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், தலீபான் செய்தித் தொடர்பாளர் 'ஜபிஹுல்லா முஜாஹித்' இன்று காபூலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,"போர் முடிந்துவிட்டது, நிலையான ஆப்கானிஸ்தான் வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆயுதம் எடுக்கும் எவரும் மக்களுக்கும் நாட்டுக்கும் எதிரி" என கூறினார்.
ALSO READ Afghanistan: ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறும் தாலிபான்; காரணம் என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR