பாகிஸ்தானின் பிரதமர்கள் துரத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், கைது செய்யப்பட்டதற்கும் நீண்ட வரலாறு உண்டு. 1947 இல் நாடு உருவானதில் இருந்து பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்களின் கைதுகள் இவை...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் முன்னாள் இம்ரான் கான்


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவருமான இம்ரான் கான் மே 9 அன்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அந்நாட்டு துணை ராணுவ ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது "சட்டவிரோதமானது" என்று கண்டித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை விடுதலை செய்தது


ஜனவரி 1962, ஹுசைன் ஷஹீத் சுஹ்ரவர்தி
1956 செப்டம்பர் முதல் அக்டோபர் 1957 வரை சுமார் பதின்மூன்று மாதங்கள் பாகிஸ்தானின் பிரதமராக ஹுசைன் ஷஹீத் சுஹ்ரவர்தி இருந்தார். நாட்டின் ஐந்தாவது பிரதமரான இவர், அரசாங்கத்தை கையகப்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க அவர் மறுத்தார்.


மேலும் படிக்க | பற்றி எரியும் பாகிஸ்தான்... பொது சொத்துக்களுக்கு தீ வைப்பு... இணைய சேவை முடக்கம்!


ஜெனரல் அயூப் கானின் உத்தரவை ஏற்க மறுத்த பிறகு, ஹுசைன் ஷஹீத் சுஹ்ரவர்தி அரசியலில் இருந்து தடை செய்யப்பட்டார், பின்னர் நாட்டின் தேர்தல் அமைப்புகளின் தகுதி நீக்க ஆணையை (EBDO).மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார். ஜனவரி 1962 இல், 1952 பாகிஸ்தான் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.



செப்டம்பர் 1977, சுல்பிகர் அலி பூட்டோ
ஆகஸ்ட் 1973 முதல் ஜூலை 1977 வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த சுல்பிகர் அலி பூட்டோ, செப்டம்பர் 1977 இல் கைது செய்யப்பட்டார். 1974ல் அரசியல் எதிரியைக் கொலை செய்ய சதி செய்ததற்காக கைது செய்யப்பட்டார், பின்னர் ஜெனரல் ஜியா உல் தலைமையில் இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.


ஆகஸ்ட் 1985, பெனாசிர் பூட்டோ
பெனாசிர் பூட்டோ இரண்டு முறை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார் (டிசம்பர் 1998-ஆகஸ்ட் 1990 மற்றும் அக்டோபர் 1993-நவம்பர் 1996). ஜியா-உல் ஹக்கின் சர்வாதிகாரத்தின் கீழ், பெனாசிர் தனது சகோதரரின் இறுதிச் சடங்கிற்காக ஆகஸ்ட் 1985 இல் பாகிஸ்தானுக்கு வந்த அவர், சுக்கூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.


மேலும் படிக்க | அழிவை நோக்கி செல்லும் பாகிஸ்தான்! இம்ரான் கானால் அதிகரிக்கும் சிக்கல்கள்!


ஜூலை 2018, நவாஸ் ஷெரீப்
ஜூலை 2018 இல், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுவிக்கப்பட்டார்.


டிசம்பர் 2018 இல், நவாஸ் ஷெரீப் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் மற்றும் சவூதி அரேபியாவில் அவரது குடும்பத்தின் எஃகு ஆலைகள் தொடர்பாக அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நவம்பர் 2019 இல், அவர் மருத்துவ சிகிச்சை பெற நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் பாகிஸ்தான் திரும்பவில்லை.


ஜூலை 2019: ஷாஹித் ககான் அப்பாஸி
ஜனவரி 2017 மற்றும் மே 2018 வரை பாகிஸ்தானின் பிரதமராக அப்பாஸி பதவி வகித்தார். ஜூலை 2019 இல், அவர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராக இருந்தபோது பல பில்லியன் ரூபாய் ஊழல் மோசடிக்காக 12 பேர் கொண்ட NAB குழுவால் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் பெற்று 2020 பிப்ரவரியில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.


செப்டம்பர் 2020, ஷெஹ்பாஸ் ஷெரீப்
பணமோசடி வழக்கில் லாகூர் உயர்நீதிமன்றம் ஜாமீன் நிராகரித்ததை அடுத்து, பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் செப்டம்பர் 2020 இல் கைது செய்யப்பட்டார். அவர் லாகூரில் உள்ள கோட் லக்பத் மத்திய சிறையில் இருந்து ஏறக்குறைய ஏழு மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார் என்று டான் செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க | முன்னாள் பிரதமர் விடுதலை! இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம்! பாக் உச்ச நீதிமன்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ