இஸ்லாமாபாத்: சீமா ஹைதர் காதல் விவகாரம்: சீமா ஹைதர் தொடர்பாக பாகிஸ்தான் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சச்சினை திருமணம் செய்து கொண்டு இந்து மதத்திற்கு மாறிய சீமா இந்தியாவில் தனது துணையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் பெரும் சிக்கல்களை சந்தித்துவ் வருகின்றனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 30 இந்துக்களை திட்டமிட்ட குற்றக் கும்பல் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. இது குறித்து தகவல் அளித்து பாகிஸ்தான் மனித உரிமை ஆணையம் (HRCP) கவலை தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணையம் ட்வீட் மூலம் அளித்துள்ள தகவலைல், 'சிந்துவின் காஷ்மோர் மற்றும் கோட்கி மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்து வருவதாகவும், அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 30 இந்து சமூகத்தினர், இஸ்லாமிய அடிப்படைவாத கிரிமினல் கும்பல்களால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் செய்திகள் குறித்து HRCP கவலை கொண்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சீர்குலைவு


சிந்து மாகாணத்தில் உள்ள காஷ்மோர் மற்றும் கோட்கி மாவட்டங்களில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சீர்குலைந்து வரும் நிலையில், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், உயர் ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்து சமூகத்தின் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக இந்தக் கும்பல் மிரட்டல் விடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. சிந்து உள்துறை அமைச்சகம் இந்த விஷயத்தை உடனடியாக விசாரித்து, இந்தப் பகுதிகளில் உள்ள அனைத்து பாதிக்கப்படக்கூடிய குடிமக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையம் கூறியது.


இந்து கோவில் மீது ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்


முன்னதாக, பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் கொள்ளை கும்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை ராக்கெட் லாஞ்சர் மூலம் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வந்தன. இந்த தகவலை போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர்கள் சிந்துவின் காஷ்மோர் பகுதியில் உள்ள உள்ளூர் இந்து சமூகத்தின் சிறிய கோயில் மற்றும் சிறுபான்மை இந்து சமூக உறுப்பினர்களின் அருகிலுள்ள வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர். காஷ்மோர்- கந்தகோட் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) இர்பான் சம்மோ தலைமையிலான போலீஸ் குழு ஞாயிற்றுக்கிழமை கோயிலில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.


 



 


மேலும் படிக்க | PUBG காதல்... பாகிஸ்தானின் சீமா ஹைதர் இந்தியா வந்ததன் நோக்கம் அம்பலம்!


கண்மூடித்தனமாக சுட்ட தாக்குதல்காரர்கள்


தாக்குதலின் போது மூடப்பட்ட கோவில் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ராக்கெட்டுகளை வீசியதாக போலீஸ் அதிகாரி கூறினார். சம்மோ கூறுகையில், 'ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தாக்குதல் நடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வந்த நிலையில், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். எட்டு அல்லது ஒன்பது ஆயுததாரிகள் தாக்குதலில் ஈடுபட்டதாக காவல்துறை அதிகாரி மதிப்பிட்டுள்ளார். பாக்டி சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் சுரேஷ் கூறுகையில், கொள்ளையர்கள் வீசிய 'ராக்கெட்' வெடிக்கவில்லை, இதனால் உயிர் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர் என சமூகத்தை பாதுகாக்குமாறு காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளார்.


மேலும் படிக்க |  பாகிஸ்தானின் சீமா ஹைதர் காதல் விவகாரம்.... பீதியில் உள்ள பாகிஸ்தான் இந்துக்கள்!


மேலும் படிக்க |  பப்ஜி காதலனுக்காக 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் - மோடிக்கு கோரிக்கை வைத்த கணவன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ