காபூலை நோக்கி முன்னேறும் தாலிபான்; இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நோக்கி தலிபான்கள் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா தனது குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியது.
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் (Afghanistan) தலைநகர் காபூலை நோக்கி தலிபான்கள் (Taliban) செல்வதால் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், இந்தியா தனது குடிமக்களை உடனடியாக தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 1,500 இந்தியர்கள் உள்ளனர்.
இந்தியா வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவுறுத்தல், இரண்டு மாதங்களில் நான்காவது முறையாகும். ஆப்கானிஸ்தானில் (Afghanistan) பணியாற்றும் அனைத்து இந்தியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் முன்பு அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டனர். அதன் கடைசி உத்தரவின் போது, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் அனைத்து இந்திய குடிமக்களையும் உடனடியாக தாயகம் திரும்புமாறு கேட்டுக் கொண்டது.
இது குறித்து, வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து இந்தியர்களுடனும், இந்தியா தொடர்பில் இருப்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் கள நிலைமையை உன்னிப்பாக கண்காணிப்பதாகவும் கூறினார்.
"ஆப்கானிஸ்தானின் நிலைமை கவலைக்குரியது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.
ALSO READ | தாலிபான்களுக்கு பயங்கரவாதிகளை சப்ளை செய்கிறார் இம்ரான்கான்: ஆப்கான் அரசு
பாக்சி இது குறித்து மேலும் கூறுகையில், "மஜார்-இ-ஷெரீபில் உள்ள துணைத் தூதரகத்தில் உள்ள பணியாளர்களை இந்த வார தொடக்கத்தில் இந்தியாவைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களையும் திரும்பப் பெற்றுள்ளது, இது ஒரு தற்காலிக நடவடிக்கை ஆகும். அங்குள்ள எங்கள் துணைத் தூதரகம் உள்ளூர் ஊழியர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது."
இந்தியாவைத் தவிர, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் இதே போன்ற ஆலோசனைகளை வழங்கியுள்ளன. தங்கள் நாட்டவர்களை உடனடியாக தாயகம் திரும்புமாறு கேட்டுக்கொள்கின்றன.
இதற்கிடையில், தலிபான்கள் வியாழக்கிழமை ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய நகரமான ஹெராத்தை கைப்பற்றியதாகக் கூறினர். ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான்களின் கொலை வெறி தாக்குதல் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, லட்சக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அடுத்த 90 நாட்களுக்குள் தீவிரவாதிகளின் வசம் போகும் என்று அமெரிக்க உளவுத்துறையும் எச்சரித்தது.
ALSO READ | Afghanistan: 90 நாட்களில், தாலிபான் வசமாகும் என எச்சரிக்கும் அமெரிக்க உளவுத் துறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR