வாங்கின $100 கோடி கடனை உடனே திருப்பி கொடுங்க என்கிறது UAE; பீதியில் பாகிஸ்தான்
இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் இது குறித்து பேச பாகிஸ்தான் தரப்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, ஆனால், பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுக்கு, இதுவரை, எந்த பதிலும் வரவில்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) தன்னிடம் கடனாக வாங்கிய 1 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது சுமார் 7,300 கோடி ரூபாபை உடனஏ திரும்ப தர வேண்டும் என கோரியதை அடுத்து பாகிஸ்தான் பீதியில் உள்ளது. 1 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நாநாட்டின் மத்திய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தானில் (SBP) டெபாசிட் செய்யப்பட்டது. 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பித் தருவதற்கான காலக்கெடு மார்ச் 12 (வெள்ளிக்கிழமை) ஆகும்.
இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் இது குறித்து பேச பாகிஸ்தான் தரப்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, ஆனால், பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுக்கு, இதுவரை, எந்த பதிலும் வரவில்லை. இவ்வளவு பெரிய தொகையைத் திருப்பித் தருவது இப்போது அதன் பொருளாதார நிலைமையை பெரிதும் பாதிக்கும் என்று பாகிஸ்தான் ஐக்கிய அரபு அமீரகத்திடம் கெஞ்சியுள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். COVID தொற்றுநோய்க்கு மத்தியில், பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, இந்த நிதியாண்டில் 1.9 சதவீதத்திலிருந்து, நிதியாண்டில் -1.5 சதவீதமாகக் குறைந்துவிட்டதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் பாகிஸ்தான் (Pakistan) இடையிலான கடன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. 2019 ஆம ஆண்டு சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடன் நெருக்கடியைக் கட்டுப்படுத்த பாகீஸ்தானுக்கு 6 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை வழங்க சர்வதேச நிதி நிறுவனம் ஒப்புக் கொண்டது.
ALSO READ | புத்தராக அவதாரம் எடுத்திருக்கும் Donald Trump ‘சிலைகள்’ஆன்லைனில் Trending
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR