உக்ரைனின் எல்லைப் பகுதியில் ரஷ்யா தனது ராணுவத்தை ரஷ்யா குவித்து வருவதால் அங்கே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. சுமார் 1 லட்சம் படைவீரர்களையும் ஆயுதங்களையும் ரஷ்யா குவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சோவியத் யூனியன் சிதைவதற்கு முன் வரை உக்ரைன் சோவியத் ஒன்றியத்தின் ஓர் உறுப்பு நாடாகத்தான் இருந்தது. அதற்குப் பின் சோவியத் சிதைந்த பின், சுதந்திரம் பெற்று தனி நாடாக தங்களுக்கென புதிய அரசியலமைப்புச் சட்டத்தோடு செயல்பட்டு வருகிறது.


'NATO' நாடுகள் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வமாக உள்ள நிலையில், இதற்கு அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், ரஷ்யா இதனை எதிர்ப்பதால், கடந்த சில மாதங்களாக ரஷ்யாவிற்கும் உக்ரைன்க்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது.


ALSO READ | நேதாஜி மரணத்தில் நீடிக்கும் மர்மம் தீருமா; விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள தைவான்..!!


இந்நிலையில், உக்ரைன் எல்லையில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக அமெரிக்கர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை ஞாயிற்றுக்கிழமை பயண அறிவுறுத்தலை வெளியிட்டது. மேலும், உக்ரைனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள அனைத்து அமெரிக்க பணியாளர்களின் குடும்பத்தினரையும், அந்நாட்டை விட்டு வெளியேறுமாறும் அமெரிக்கா உத்தரவிட்டது. 


உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள சமீபத்திய செய்திகளை அமெரிக்க வெளியுறவுத்துறை குறிப்பிட்டது. இருப்பினும், உக்ரைனை தொடர்பாக நேட்டோ நாடுகள் தவறான தகவல்களை அளித்து, அதன் மூலம் பதட்டத்தை அதிகரித்து வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.


NATO நாடுகளும், அமெரிக்காவும் உக்ரைனில் ஆயுதங்களைக் குவித்து, ரஷ்யாவிற்கும்  உக்ரைனுக்கு இடையிலான பதற்றத்தை அதிகரிப்பதாக ரஷ்ய குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவோ, உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் எதுவும் தங்களுக்கு இல்லை என்று கூறிவருகிறது.


ALSO READ | 75 ஆண்டுகளில் முதன்முறையாக குடியரசு தின அணிவகுப்பு 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR