இலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் என கோத்தபய ராஜபக்ச ட்வீட்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் மஹிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா ஆகியோர் உள்ளிட்ட 35 பேர் இத்தேர்தலில் போட்டியிட்டனர்.


வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், 81.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இந்நிலையில், இலங்கை பொடுஜானா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச  தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், இலங்கை பொடுஜானா கட்சி 2019 ஜனாதிபதித் தேர்தலில் தனது வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றுள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் 50% வாக்குகளை எட்டி முன்னிலையில் உள்ளார். இதன்மூலம் அவரின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.


இதை தொடர்ந்து, இலங்கையின் புதிய கோணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் என்று, புதிய அதிபராக பதவியேற்கவுள்ள இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளார் கோத்தபய ராஜபக்சே நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார். அதில், "இலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்; தேர்தல் பரப்புரையில் எப்படி அமைதி காத்தோமோ அதேபோல வெற்றியையும் அமைதி, ஒழுக்கம், கண்ணியத்துடன் கொண்டாடுவோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார். 



முன்னதாக, இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.