கோவிட்-19 தடுப்பூசியை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
கொரோனா தொற்று பரவலின் போது, அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசியை தயாரித்தன. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கோவிஷீல்ட் என்ற பெயரில் விற்பனை செய்தது.
கொரோனா தொற்று பரவலின் போது, அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு (AstraZeneca- Oxford ) பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசியை தயாரித்தன. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கோவிஷீல்ட் என்ற பெயரில் விற்பனை செய்தது. உலக நாடுகளை சேர்ந்த பல கோடி மக்கள் இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்நிலையில் அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட வெகு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக சொல்லி பிரிட்டன் நீதிமன்றத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்குக தொடரப்பட்ட நிலையில், அந்த நாட்டில் தற்போது விசாரணையில் உள்ளது.
பக்க விளைவுகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு மத்தியில், அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரிக்கும் Covid-19 தடுப்பூசி நிறுவனம் சந்தையில் இருந்து தனது தடுப்பூசியை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. ஐரோப்பாவில் இருந்து Vaxjaveria என்னும் தடுப்பூசியை திரும்பப் பெறுவது தொடரும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இருப்பினும், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை திரும்பப் பெறுவதற்கு காரணம் பக்க விளைவுகள் குறித்த பிரச்சனை அல்ல எனக் கூறியுள்ளது. தொற்றுநோய்க்குப் பிறகு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில், சந்தையில் தேவையானதை விட அதிகமான தடுப்பூசிகள் இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. எனவே தடுப்பூசியை திரும்பப் பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பல வகையான கோவிட்-19 தடுப்பூசிகள் சந்தையில் வந்து விட்டதாக தெரிவித்துள்ள அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் , அன்றிலிருந்து தனது நிறுவன தடுப்பூசிக்கான தேவை குறைந்துள்ளது எனவும் கூறியுள்ளது. மேலும், அதன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசியை திரும்பப் பெறுவதற்கு நிறுவனம் மார்ச் 5ம் தேதியே விண்ணப்பம் சமர்பித்துள்ளதாகவும், மே 7ஆம் தேதி தான் இதற்கான நடைமுறை தொடங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த முடிவின் மூலம் இனி அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கோவிட் தடுப்பூசி தயாரிப்பதையும், விநியோகம் செய்வதையும் நிறுத்திக் கொள்கிறது. இந்த செய்தியினை பிரிட்டன் செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. மேலும், இந்த முடிவு முற்றிலும் தற்செயலானது மட்டுமே என்ற விளக்கமும் தரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கடும் வெப்பத்தினால் 100 பேர் மரணம்... பால் விலையை மிஞ்சிய ஐஸ் விலை..!!
சமீபத்தில், பிரிட்டிஷ் உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக தனது கொரோனா தடுப்பூசி இரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட்டுகள் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஸ்ட்ராஜெனெகா ஒப்புக் கொண்டது. தனது கோவிட்-19 தடுப்பூசி, வெகு சிலருக்கு த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்குறி (TTS) போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று பிரிட்டிஷ் உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட போது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்கான அறிகுறியின் காரணமாக, உடலில் இரத்தக் கட்டிகள் உருவாகத் தொடங்கும் அல்லது பிளேட்லெட்டுகள் உடலில் வேகமாக குறையத் தொடங்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலில் இரத்தம் உறைவதால் மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
இந்தியாவில், இந்த AstraZeneca தடுப்பூசியை ஆதார் பூனாவாலாவின் நிறுவனமான சீரம் நிறுவனம் (Serum Institute of India) தயாரித்தது. சீரம் நிறுவனம் இந்த தடுப்பூசியை கோவிஷீல்ட் என்ற பெயரில் சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | Covid தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ