சீனாவின் Shenzhou 13 விண்வெளி வீரர்கள் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் அறிவியல் பாடம் எடுக்கும் முன்முயற்சியை எடுத்துள்ளனர். விஞ்ஞானிகள் டியாங்காங் விண்வெளி நிலையத்தில் (Tiangong space station)இருந்து  ஆன்லைன் வகுப்பு எடுக்க உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Shenzhou என்பது சீனா (China)தாயரித்துள்ள ஒரு விண்கலம் ஆகும். அதில் உள்ள விண்வெளி வீரர்களான ஜாய் ஜிகாங், வாங் யாப்பிங் மற்றும் யே குவாங்ஃபு ஆகியோர் மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்துவார்கள். டியாங்காங் நிலையத்தின் மையப்பகுதியான தியான்ஹே தொகுதியில் இருந்து விண்வெளி வீரர்கள் ஆன்லைனில் தோன்றி பாடம் நடத்துவார்கள்.


ALSO READ | விண்வெளியில் திரைப்பட ஷூட்டிங்; வெற்றிகரமாக திரும்பும் படக் குழு..!!


இந்த வகுப்பில், விண்வெளி வீரர்கள் உயிரியல் உயிரணுக்களின் நடத்தை, மைக்ரோ கிராவிட்டியில் இயக்கம்,  விண்வெளியில் (Space) உள்ள வாழ்க்கை மற்றும் தியான்ஹே விண்வெளி நிலையத்தில் உள்ள அம்சங்கள், போன்ற விண்வெளி சம்பந்தமான விஷயங்கள் பலவற்றைப் பற்றி குழந்தைகளிடம் உறையாற்றுவார்கள்.



ALSO READ | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; விண்வெளி நடையை ஒத்தி வைத்தது NASA!


இந்த வகுப்பு  "டியாங்காங் வகுப்பறை" என்ற தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கும். இந்தத் தொடரின் நோக்கம் சிறு குழந்தைகளுக்கு விண்வெளி மற்றும் அறிவியலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுவதும் ஆகும்.


சீனாவில் இது போன்ற முயற்சி எடுக்கப்படுவது முதல் முறையல்ல. 2013ம் ஆண்டில், வாங் யாப்பிங் தனது முதல் விண்வெளிப் பயணத்தின் போது, ​​டியாங்காங்-1 விண்வெளி ஆய்வகத்தில் இருந்தபோது 60 மில்லியன் சீனக் குழந்தைகளுடன் கலந்துரையாடி,  முதல் பாடத்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | விண்வெளியில் போர் மூண்டால் சாமான்யரின் வாழ்க்கையும் ஸ்தபித்து விடும்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR