COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் தேவாலயம், நட்சத்திர ஹோட்டல்கள் என 6 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 49 பேராக அதிகரிப்பு; 280-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. 




இலங்கையில் கொச்சிக்கடை தேவாலயம் உட்பட 6 இடங்களில்  நடந்த குண்டுவெடிப்பில் 42-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...



கொழும்புவில் கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்திலும், நீர்கொழும்புவில் ஒரு இடத்திலும் குண்டு வெடிப்பில் 80 பேர் படுகாயம்!!


உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது. இந்நிலையில் கொச்சிக்கடை , நீர்க்கொழும்பு பகுதியில் உள்ள ஆலயத்தில் பிரார்த்தனையின் போது பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. 


இந்நிலையில், இலங்கையில் 4 தேவாலயங்கள், 2 ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளன. கொழும்புவில் கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்திலும், நீர்கொழும்புவில் கட்டுவப்பிட்டிய தேவாலயத்திலும் குண்டு வெடிப்பில் பலர் உயிரிழப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது. 



கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம் மற்றும் நீர்கொழும்புவில் உள்ள ஆலயம் ஒன்றிலும், நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. முதற்கட்டமாக 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் யார் ஈடுபட்டது என்பது குறித்து இதுவரை அறியப்படவில்லை. மேலும் பல ஆலயங்கள் மற்றும் ஓட்டலில் குண்டு வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அதிகாரிகள் யாரும் உறுதி செய்ய முடியவில்லை.