போர்ட்-ஓ-பிரின்ஸ் (Port-au-Prince): ஹைட்டியில் எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். வெடிப்பு  சத்தம் தொலைதூர பகுதிகளில் கூட கேட்டது என்பதை வைத்து அதன் தீவிரத்தை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேப்-ஹைட்டியன் நகரில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக பிரதமர் ஏரியல் ஹென்றி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இந்த சம்பவத்தால் தாம் மிகுந்த மனவேதனை அடைகிறேன் என்றார் அவர். 


ALSO READ | Antarctica: உலகிற்கே ஆச்சுறுத்தலாக உருவெடுக்கும் பனிப்பாறை விரிசல்கள்


Le Noveliste செய்தித்தாள் இந்த விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர்  காயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை இருப்பதால் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. டாக்டர் கால்ஹில் ட்யூரன் செய்தித்தாளிடம் கூறுகையில், 'தற்போது, மருத்துவமனை நிரம்பி வழிவதால்,  நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்'  என்றார்.


சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், சிலர் சம்பவத்திற்குப் பிறகு,  இந்த துன்பகரமான நேரத்திலும், விபத்திற்கு உள்ளாகியுள்ள டேங்கரில் இருந்து வீடுகளுக்கு  பெட்ரோல் (Petrol) எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர். நாடு  தற்போது கடந்து வரும் நிலை மிகவும் வருத்தமளிக்கிறது என்று பலர் கூறினர்.


ALSO READ | Black Hole: பால்வீதியின் மிகப்பெரிய கருந்துளையில் கசிவு என NASA தகவல்!


விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஹைட்டியின் முன்னாள் பிரதமர் கிளாட் ஜோசப், "நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார். இதனை தேசிய பேரழிவு என அறிவிக்கப்பட்ட நிலையில், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு  முழுவதிலும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


ALSO READ | செயற்கைக்கோளை அழித்த ரஷ்யா; விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR