திருமணம் கடந்த உறவுக்கு தடை! இந்தோனேஷியா செல்லும் காதலர்களுக்கு சிக்கல்?
சுற்றுலாவிற்கு புகழ் பெற்ற இந்தோனேசியா திருமணம் கடந்த உறவுக்கு கொள்ள தடை விதித்துள்ளது. திருமணமாகாத தம்பதிகள் இனி அங்கு சுற்றுலா செல்லத் திட்டமிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தோனேசியாவின் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட குற்றவியல் சட்டம் பல சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாத் துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்தோனேஷியா திருமணத்திற்கு வெளியே உடலுறவைத் தடைசெய்துள்ள நிலையில், திருமணம் ஆகாத காதலர்கள், இந்தோனேஷியா செல்வதில் சிக்கல் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தோனேசியாவின் பாராளுமன்றம் டிசம்பர் 6, 2022 அன்று காலனித்துவ கால குற்றவியல் சட்டத்தை நிறைவேற்றியது, அதில் நாட்டிற்கு வருகை தருபவர்கள் உட்பட அனைவருக்கும் திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்வதற்கான தடையும் அடங்கும். புதிய முறையின்படி, சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், கோவிட்-19 பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வரும் சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்படும் என அச்சம் வெளியிட்டனர். சுற்றுலா பயணிகள் வரவு பெரிதும் குறையும் என்று கவலைப்பட்டனர். திருமணமாகாத தம்பதிகள் ஒன்றாக வாழ்வதை புதிய சட்டம் தடை செய்கிறது எனவே, காதலர்கள் வருகையும் குறையும். அதே நேரத்தில் தம்பதிகளும் கூட தங்கள் பயணத்தின் போது ஒரு ஹோட்டல் அறையில் ஒன்றாக தங்க விரும்பினால், ஹோட்டல் அறைகளில் சோதனை உட்பட துன்புறுத்தலுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | திருமணத்திற்கு முன் உடலுறவுக்கு ‘இந்த’ நாடுகளில் தடை! மீறினால் மரண தண்டனை!
இப்போது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு நிவாரணம் வழங்க பாலி ஆளுநர் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகள் வர மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார். இந்தோனேஷியா தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் திருமண நிலையை அதிகாரிகள் சரிபார்க்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
குற்றவியல் சட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளை கட்டுப்படுத்தும் சட்டங்கள், நாட்டின் ஜனாதிபதியை அவதூறு செய்ததற்காக தண்டனை, போலி செய்திகளை பரப்புதல் மற்றும் மத நிந்தனை செய்தல் ஆகியவை அடங்கும். இருப்பினும், சட்டம் படிப்படியாக நடைமுறைக்கு வருவதற்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகலாம்.
மேலும் படிக்க | கொடூர விபத்து! விமான இன்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்த பணியாளர்!
2025 ஆம் ஆண்டுக்குள் சுற்றுலாத் துறையானது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை எட்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது. இருப்பினும், குற்றவியல் சட்டம் நடைமுறையில் இருப்பதால், நாடு மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கக் கூடும். தேசிய சுற்றுலா வாரியம் இதை பாதிப்பை ஏற்படும் நடவடிக்கை என்று அழைக்கிறது. பாலியின் இந்தோனேசிய டூர்ஸ் அண்ட் டிராவல் ஏஜென்சியின் தலைவர் ஐ புட்டு வினாஸ்ட்ரா கூறுகையில், "குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில், பலர் திருமணம் செய்து கொள்ளாமல், குழந்தைகளைப் பெறாமல் ஒன்றாக வாழ்கின்றனர். அவர்களின் தனியுரிமையை நாம் பாதுகாக்க வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க | மெக்கா மெதினா இடையிலான புல்லெட் ரயிலை ஓட்டி வரலாறு படைக்கும் பெண்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ