The Lava show: எரிமலையே இல்ல ஆனா அது வெடிக்கறத பார்க்க விருப்பமா? லாவாவை பார்க்கலாம் வாங்க
The Lava show: எரிமலை என்றாலே ஒரு திகிலான உணர்வு ஏற்படும், இதனை பற்றி நாம் பள்ளியில் படித்திருப்போம். எரிமலை என்றதுமே நெருப்பு குழம்பாக இருக்கும் என்பது நமக்கு தெரியும்.
The Lava show: எரிமலை என்றாலே திகிலான உணர்வு ஏற்படும், இதனை பற்றி நாம் அறிந்திருப்போம். நெருப்பு குழம்பாக இருக்கும் எரிமலையின் சீற்றம் என்பது பேரழிவை ஏற்படுத்தும். எரிமலையின் அருகில் போவதற்கு யாருக்குமே விருப்பமோ அல்லது துணிவோ இருக்காது. இயற்கைச் செயல்பாடான எரிமலை சீற்றத்தில், பூமிக்கு அடியிலிருந்து பாறைத்துகள்களும், அதீத வெப்பமுடைய நீரும், கூழ்ம நிலையிலுள்ள பாறைகளும் அதிக அழுத்தத்துடனும், அதீத வேகத்துடனும் பூமிக்கு மேற்பரப்பில் தூக்கி வீசப்படும். அதைப் பார்க்க நெருப்பு ஆறு ஓடுவது போல இருக்கும்.
ஆனால், நூற்றுக்கணக்கான நபர்கள் எரிமலை வெடிப்பை பார்த்து ரசித்தார்கள் என்றால் நம்ப முடிகிறத? ரெய்காவிக்கில் உள்ள ஒரு இருண்ட ஆடிட்டோரியத்தில் பாதுகாப்பாக அமர்ந்து ஆரஞ்சு எரிமலைக் குழம்பு வழிவதைப் பார்த்தால் அச்சம் என்பது அருகில் வராது தானே?
கறுப்பு மணலால் இருபுறமும் சூழ, அதன் நடுவில் இருந்து சூரியன் உதயம் ஆவது போல அறையை ஒளிரச் செய்யும் எரிமலை கசியும் நிகழ்வைப் பார்த்த பார்வையாளர்கள் பரவசம் ஆனார்கள். இது, ஐஸ்லாந்தின் சமீபத்திய சுற்றுலா ஈர்ப்பான 'லாவா ஷோ', இது 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்லா எரிமலையின் உண்மையான வெடிப்பில் இருந்து மீண்டும் சூடுபடுத்தப்பட்ட எரிமலையைப் பிரதிபலிக்கும் ஷோ.
மேலும் படிக்க | 40 வருடங்களுக்கு பிறகு சீறிய எரிமலை! தங்கமாய் ஓடும் எரிமலைக் குழம்பு லாவா
ஸ்லைடில் எரிமலை வெடித்தாலும், இந்த வித்தியாசமான நிகழ்ச்சியில், எரிமலையில் வெளிப்படும் வெப்பம் பார்வையாளர்களுக்கும் சூட்டை ஏற்றுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது, அதனால் பார்வையாளர்களில் சிலர் அணிந்திருந்த கனமான சட்டைகளை அகற்றினார்கள். அதைப்பார்த்த, தொகுப்பாளர் இயன் மெக்கின்னன், "உண்மையான உருகிய எரிமலைக்குழம்பு ஒரு கட்டிடத்தின் உள்ளே வேண்டுமென்றே பாய்வதை நீங்கள் அனுபவிக்கும் நிகழ்ச்சி இது" என்று சொன்னார்.
நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்
ரெய்க்ஜாவிக்கிலிருந்து 40 கிலோமீட்டர்கள் (25 மைல்) தொலைவில் கடந்த ஆண்டு எரிமலை இரு முறை வெடித்தது. அதைப் பார்க்க ஐஸ்லாந்தின் ஃபாக்ரடால்ஸ்ஃப்ஜால் மலைக்கு பலரும் சென்றனர். ஆனால் எல்லா எரிமலை வெடிப்புகளும் பாதுகாப்பானவை அல்ல.
மேலும் படிக்க | போடா லூசு! லியோனல் மெஸ்ஸியின் ஆக்ரோஷம் வைரல்! அம்பியா? ரெமோவா? ரசிகர்கள் அதிர்ச்சி
கடந்த 1918 இல் வெடித்த ஐஸ்லாந்தின் மிகவும் ஆபத்தான எரிமலைகளில் ஒன்றான கட்லாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பாறைகள் 600 கிலோ (1,320 பவுண்டுகள்) டெப்ரா இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டது. அதை அதன் உருகும் புள்ளி வரை சூடாக்குகி, அதாவது சுமார் 1,100 டிகிரி செல்சியஸ் (2,000 ஃபாரன்ஹீட்) வெப்பமூட்டி, பின்னர் அதை அறைக்குள் ஊற்றி இந்த செயற்கை எரிமலைக் குழம்பு உருவக்கப்படுகிறது.
ஜான்சன் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு முதல் தெற்கு ஐஸ்லாந்தில் உள்ள Vik இல் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது, ஆனால் ரெய்க்ஜாவிக் (Reykjavik) நிகழ்ச்சி கடந்த மாதம் முதல் தொடங்கப்பட்டது.
ஐஸ்லாந்து நெருப்பு மற்றும் பனியின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. 33 எரிமலைகள் இங்குள்ளன. இது ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான எரிமலைகள் கொண்ட இடமாகும். இங்கு, சராசரியாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிப்பு ஏற்படுகிறது.
மேலும் படிக்க | அடுத்த ஆண்டு இந்திய அணி விளையாடும் போட்டிகள்: முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ