இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வியாழக்கிழமை இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹோம் தொடர்களுக்கான அட்டவணையை அறிவித்தது. ஹோம் சீசனில் 6 டி20 போட்டிகள், 9 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருடன் தொடங்க உள்ளது. போட்டிகள் முறையே மும்பை, புனே மற்றும் ராஜ்கோட்டில் ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவும் இலங்கையும் ஜனவரி 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் முறையே கவுகாத்தி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரத்தில் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன.
மேலும் படிக்க | PAKvsENG: ஹோட்டலுக்கு அருகில் துப்பாக்கி சத்தம்! பதட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள்!
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக ஜனவரி 18, 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் முறையே ஹைதராபாத், ராய்பூர் மற்றும் இந்தூரில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தியா ஜனவரி 27, 29 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் முறையே ராஞ்சி, லக்னோ மற்றும் அகமதாபாத்தில் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரில் விளையாடுகிறது.
: BCCI announces schedule for Mastercard home series against Sri Lanka, New Zealand & Australia. #TeamIndia | #INDvSL | #INDvNZ | #INDvAUS | @mastercardindia
More Detailhttps://t.co/gEpahJztn5
— BCCI (@BCCI) December 8, 2022
பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் தொடங்கும். பின்னர் டீம் இந்தியா டெல்லி (பிப்ரவரி 17), தர்மசாலா (மார்ச் 1) மற்றும் அகமதாபாத்தில் (மார்ச் 9) அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். இந்த தொடர் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் கடைசி பதிப்பாகவும் இருக்கும். அதன் பிறகு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. மும்பை (மார்ச் 17), விசாகப்பட்டினம் (மார்ச் 19) மற்றும் சென்னையில் (மார்ச் 22) நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் ஹோம் சீசன் முடிவடையும்.
மேலும் படிக்க | வங்கதேசத்துடன் தோல்வி! இந்திய அணியை கலாய்த்த சேவாக்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ