மீண்டும் ஏற்படுகிறதா கொரோனா அலை?...சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் தொற்று உயர்வு
சீனாவில் வேகமாகப் பரவி வரும் BA.2 ஒமைக்ரான் திரிபு, அமெரிக்காவிலும் வேகமாகப் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.
உலகம் முழுவதும் பரவலாக குறைந்து வந்த கொரோனா தொற்று சீனாவில் கடந்த வாரத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. தொடக்கத்தைப் போலவே 6 ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட புதிய மருத்துவமனையை அவசரம் அவசரமாக கட்டி சீனா சிகிச்சை அளித்து வருகிறது. கொரோனா பாதிப்பு தொடந்து அதிகரிப்பதால் சீனாவில் 13 மாகாணங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் ஒமைக்ரானும், அதன் திரிபான BA.2 வைரசுமே பெருமளவில் ஏற்பட்டுள்ளன. சீனாவைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது கொரோனா பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பில் சுமார் 25% பாதிப்புகள் BA.2 ஒமைக்ரான் திரிபு ஆகும். இந்த எண்ணிக்கை வரும் வாரங்களில் அதிகரிக்கலாம் என சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். எனினும் ஒமைக்ரானை விட BA.2 வைரஸ் ஆபத்தானதாக இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலும் படிக்க | சீனாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா: பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு
அமெரிக்காவைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியிலும் ஒமிக்ரானின் உருமாற்றம் அடைந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வியட்நாம், தென்கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இரு வாரங்களுக்கு முன்பு தான் கட்டாய முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. இந்த சூழலில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், மீண்டும் கொரோனா அலை ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | கொரோனா ஒழிந்து விட்டது என நினைப்பது மிகப்பெரிய தவறாக இருக்கும்: ஐநா
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR