பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவரது 12 வயதில் சூராவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பாபா வாங்கா கூறி வந்தார். இவர் 1996ம் ஆண்டு தனது 84வது வயதில், காலமானார். இருப்பினும் உயிரிழப்பதற்கு முன், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.  இவரது கணிப்புகளில்  85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீதான் தாக்குதல், அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்ற கணிப்பு, 2016ம் ஆண்டு ISIS என்னும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் என்ற கணிப்பு, ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும் என்ற கணிப்பு ஆகியவை உண்மையாகியுள்ளன. 


பாபா வாங்கா 2022 ஆம் ஆண்டு குறித்து சில கணிப்புகளை கூறியுள்ளார். அதில் 2 இதுவரை உண்மையாகி உள்ளது. இதில் முதலாவதாக ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று கணிக்கப்பட்டது உண்மையாகியது. ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெய்த மழையால் அங்கு கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இரண்டாவது கணிப்பு பல நகரங்களில் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என கூறியிருந்தார்.   அதில் இடம் மற்றும் நேரம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்தக் கணிப்பு இப்போது ஐரோப்பாவில் உண்மையாகி வருவதாகத் தெரிகிறது. பெரிய பனிப்பாறைகள் மற்றும் தண்ணீரால் சூழப்பட்டுள்ள பிரிட்டன், இத்தாலி மற்றும் போர்ச்சுகல்,  கடுமையான வறட்சியின் பிடியில் உள்ளது.


மேலும் படிக்க | DART Mission: பூமியை அழிவில் இருந்து காக்க நாசா மேற்கொள்ளும் DART மிஷன்!


இந்தியா பற்றிய கணிப்பில், பாபா வங்கா, இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரிக்கும். வெட்டுக்கிளி திரள் இந்தியாவை தாக்கி, பயிர்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்றும் இதனால் நாட்டில் பஞ்சம் உருவாகும் என்றும் கூறியிருந்தார். வேற்று கிரக வாசிகள் இந்தியா வருவார்கள் எனவும் அவரது கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பாபா வாங்காவின் இந்த கணிப்புகள் எந்த அளவிற்கு உண்மை என்பது எதிர்காலத்தில் தெரியும். ஆனால், அவரது பழைய கணிப்புகள் பல உண்மையானதை நினைத்து  பலரும் அச்சத்தில் உள்ளனர்.


மேலும் படிக்க | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; மனிதர்களுக்கு எமனாகும் என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ