அண்டை நாடான பாக்கிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான பலூசிஸ்தான் உள்ள லாஸ்பேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஒருவர் இறந்துவிட்டார் எனவும் பலர் காயமுற்றனர் எனவும் பாக்கிஸ்தான் மீடியா தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்க ரிக்டர் அளவு 6.1 ஆக பதிவாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலூசிஸ்தான் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிக்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர் எனவும் தகவல் வந்துள்ளது


 



 


அதேபோல டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கஷ்மீர் மாநிலத்தை மையமாக கொண்டு பதிவாகியுள்ளது என தகவல் வந்துள்ளது. மேலும் கஷ்மீர் மாநிலத்தையும் நிலநடுக்கம் தாக்கியுள்ளது


 



 


14 நிமிடங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 6.1 ஆக இருந்தது என EMSC (ஐரோப்பிய மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம்) தெரிவித்துள்ளது.