சவூதி அரேபியாவில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பறவைகள் மற்றும் அவற்றின் முட்டைகளுக்கு இடைகால தடை விதித்துள்ளது!
 
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிக்குஞ்சுகள், அவற்றின் முட்டைகள் ஆகியவற்றுக்கு இடைகால தடை விதிப்பதாக சவூதி அரேபியா அரசு இன்று(வியாழன்) தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் பரவி வரும் பறவை காச்சல் தான் இதற்கு காரணம் எனவும், இந்திய பறவைகளை தங்கள் நாட்டில் இறக்குமதி செத்தால் தங்கள் நாட்டு உயிரினங்களுக்கும் இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஜனவரி மாதம், உலக சுகாதார அமைப்பின் உலக அமைப்பு (OIE), இந்தியாவின் விவசாய அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோளிட்டு, தெற்கு கர்நாடகாவின் பெங்களூருவின் அருகே அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது என தெரிவித்தது. இந்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது!


மேலும் சவூதி அரேபியாவின் சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை அமைச்சு, பாரிஸ் அடிப்படையிலான OIE வெளியிட்ட எச்சரிக்கைக்கு இணங்க அதன் தடையை அறிவித்துள்ளது என்று சவுதி அரசு செய்தி நிறுவனம் SPA தெரிவித்துள்ளது.


OIE அதன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, டிசம்பர் 26 அன்று தசராஹல்லா கிராமத்தில் உள்ள பறவைகள் மத்தியில் சுமார் 951 பறவைகளிடம் H5N8 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.


எனினும் எந்த வகை பறவைகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை!