டாக்கா: வங்க தேசத்தின் உள்துறை அமைச்சர் அசாதுசமான் கான் ஞாயிற்றுக்கிழமை துர்கா பூஜையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் 'முன் கூட்டியே திட்டமிடப்பட்டவை' என்றும், இந்த தாக்குதல்கள் வங்கதேசத்தின் மத நல்லிணக்கத்தை அழிப்பதை நோக்கமாகக் கொண்டவை என்றும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன்கிழமை கொமிலாவில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாக நூற்றுக்கணக்கான பெயரிடப்பட்ட மற்றும் பெயரிடப்படாத நபர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது


புனித குர்ஆனை அவதூறு செய்ததாக கூறப்படுவது மற்றும் கொமில்லாவில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் வங்க தேசத்தில் (Bangladesh) மத நல்லிணக்கத்தை அழிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டவை என்று உள்துறை அமைச்சர் கூறினார். "இது ஒரு குறிப்பிட்ட குழுவால் தூண்டப்பட்ட செயல் என்று எங்களுக்குத் தோன்றுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.


கொமிலா சம்பவத்திற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது, ​​"அனைத்து ஆதாரங்களும் கிடைத்தவுடன் அதை பகிரங்கப்படுத்துவோம், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு இது வரை இல்லாத அளவு கடுமையான தண்டனை வழங்கப்படும்" என்று அமைச்சர் கூறினார்.


ALSO READ | மதரீதியான கலவரம்! ஹிந்து கோவில்களில் தாக்குதலை ஏற்படுத்திய கும்பல்!


"கொமில்லாவில் மட்டுமல்ல, ராமு மற்றும் நசீர்நகரில் நடந்த வகுப்புவாத வன்முறை செயல்களும் நாட்டை சீர்குலைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்" என்று கான் கூறியதாக டாக்கா ட்ரிபியூன் (Dhaka Tribune) செய்தி வெளியிட்டுள்ளது


"சனிக்கிழமை இரவு முதல் எந்த சம்பவமும் பதிவாகவில்லை. உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் எங்கள் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளன. வகுப்புவாதத்தை தூண்டி, அமைதியை குலைக்கு முயற்சிப்பவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்" என்று கான் மேலும் கூறினார்.


பங்களாதேஷில் புதன்கிழமை நடந்த வகுப்புவாத வன்முறைக்குப் பிறகு உள்துறை அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். நானுவார் திகியின் கரையில் உள்ள துர்கா பூஜை அரங்கில், புனித குர்ஆனை இழிவுபடுத்தியதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து, சந்த்பூர், சிட்டகாங், காசிபூர், பண்டர்பன், சபைனாவாப்கஞ்ச் மற்றும் மவுல்விபஜார் பகுதியில் பல பூஜை இடங்கள் நாசப்படுத்தப்பட்டன. 


வெள்ளிக்கிழமையன்று, விஜய தசமி அன்று துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது நோகாலி மாவட்டத்தின் பேகம்கஞ்ச் பகுதியில் நடந்த தாக்குதலில் ஜடான் குமார் சாஹா என்ற நபர் கொல்லப்பட்டார் மற்றும் 17 பேர் காயமடைந்தனர் என டாக்கா ட்ரிபியூன் தெரிவித்துள்ளது.


ALSO READ | விண்வெளியில் திரைப்பட ஷூட்டிங்; வெற்றிகரமாக திரும்பும் படக் குழு..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR