புதுடெல்லி: அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama) அடுத்த வாரம் பென்சில்வேனியாவில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்காக (Joe Biden) பிரச்சாரம் செய்வார் என்று பிடன் பிரச்சார குழு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும் அவரது பிரச்சாரம் ஒன்றும் எடுபடாது எனக் கூறியுள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump),  2016 ஆம் ஆண்டை போலவே, ஒபாமாவை நிராகரித்து தன்னை ஜெயிக்க வைத்ததை போலவே, தற்போதும், ஜெயிக்க வைப்பார்கள் எனவும் கூறினார்.


77 வயதான பிடன் ஒபாமாவின் இரண்டு பதவிக்காலங்களிலும் துணை அதிபராக இருந்தார். பிடன் மற்றும் அவரது துணை அதிபர் வேட்பாளரான, இந்தியாவைச் சேர்ந்த  கமலா ஹாரிஸுக்காக ஆன்லைன் மூலம் பிரச்சாரங்களை மேற்கொள்ள ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார்.  59 வயதான முன்னாள் அதிபர் ஒபாமா தனிப்பட்ட முறையில் பிரச்சாரம் செய்வது இதுவே முதல் முறையாகும்.


அதிபர் பதவியில் இருந்து விலகிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒபாமா தனது பேச்சு திறன் காரணமாக, இன்னும் பெரிய கூட்டத்தைத் கவரும் திறன் கொண்டவராகவே இருக்கிறார்.


"அக்டோபர் 21 புதன்கிழமை, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவுக்கு ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ் சார்பாக பிரச்சாரம் செய்வார்" என்று பிடன் பிரச்சாரம் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ALSO READ | கல்வான் மோதல் இந்தியா- சீனா உறவை பெரிதும் பாதித்துள்ளது: அமைச்சர் ஜெய்சங்கர்


தனது தேர்தல் பேரணிகளில் ஒரு பெரிய கூட்டத்தை ஈர்க்கக்கூடிய ஒரே ஜனநாயகக் கட்சித் தலைவர் ஒபாமா மட்டுமே. ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் பதினைந்து நாட்கள் மீதமுள்ள நிலையில், அவர் பிரச்சாரத்தில் குதித்திருப்பது, கறுப்பின அமெரிக்கர்கள், மற்றும் யாருக்கு ஓட்டு போடுவது என்ற குழப்பத்தில் உள்ளவர்களையும் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக ஈர்க்கும் என நம்புகின்றனர்.


சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி, குடியரசுக் கட்சியின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்  சராசரியாக ஒன்பது புள்ளிகளால் முன்னிலை வகிக்கிறார் என கூறப்படுகிறது.


ALSO READ | இந்தியா-தைவான் நெருக்கத்தால் ஆத்திரமடையும் சீனா... சிக்கிமை பிரிப்போம் என புலம்பல்..!!!


இருப்பினும், தேர்தலில் பலத்த போட்டி இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன, குறிப்பாக COVID-19 இலிருந்து மீண்ட பின்னர் டிரம்ப் தனது பேரணிகளை மீண்டும் தொடங்கி, தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். பல மாநிலங்களில் அவர் நடத்தும் தேர்தல் பேரணிகளுக்கு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வருகை தருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.