டோக்லாமில் சீனா தனக்கு கிராமம் உள்ளதாக கூறி, அந்த  கிராமத்தின் புகைப்படத்தை CGTN  நியூஸ் ஊடகத்தின் மூத்த தயாரிப்பாளர் ஷேன் ஷிவே ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த இடம் 2017 ஆம் ஆண்டில் டோக்லாமில் சர்ச்சைக்குரிய இடத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பது முக்கிய விஷயம் ஆகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டோக்லாமில் சீனா (China)  ஒரு புதிய கிராமத்தை அமைத்துள்ளது என்று சீன பத்திரிகையாளர் ஷென் ஷிவே ட்வீட் செய்துள்ளார்.


இருப்பினும், சர்ச்சை அதிகரித்தபோது, ​​பத்திரிகையாளர் புகைப்படங்களை நீக்கிவிட்டார். ஆனால் அதற்குள் அந்த ட்வீட் வைரலாகிவிட்டது.


பூட்டானின் (Bhutan) டோக்லாம் பகுதியில் 'கிராமம்' அமைத்துள்ளது குறித்து சீன பத்திரிகையாளர் ஒருவர் கூறிய கூற்றை பூட்டான் நிராகரித்தது. பூட்டானுக்குள் சீன கிராமம் இல்லை என்று இந்தியாவில் பூட்டானின் தூதர் தெளிவுபடுத்தியுள்ளார். டோக்லாம் பகுதியில் சீனா ஒரு புதிய கிராமத்தை நிறுவியுள்ளது என்று கூறி சீன பத்திரிகையாளர் ஷென் ஷிவே ட்வீட் செய்தார்


பூட்டானுக்குள் சீன கிராமம் இல்லை
ZEE NEWS உடன் இணைந்த WION தொலைபேசியுடன் பேசிய பூட்டானின் தூதர் மேஜர் ஜெனரல் வெட்சோப் நம்கீல் இந்த கூற்றை திட்டவட்டமாக மறுத்து, 'பூட்டானுக்குள் சீன கிராமம் எதுவும் இல்லை' என்று கூறினார்.


சீன ஊடகவியலாளர்கள் இந்த கிராமத்தின் படங்களை பதிவிட்டு, டோக்லாம் அருகே சீனா எவ்வளவு மேம்பாட்டுப் பணிகளைச் செய்துள்ளது என்பதை வெளிப்படுத்த விரும்பினர், ஆனால் படங்கள் வெளியானதில் சீனர்கள் சீனர்கள் சதி அம்பலமாகியது. ஏனெனில் இந்த பகுதி பூட்டானின் எல்லைக்குள் வருகிறது.


ALSO READ | பிரதமர் மோடியும் பூட்டான் பிரதமரும் 2ம் கட்ட  RuPay கார்டு திட்டத்தை தொடக்கினர்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR