மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவம் தனது கவனத்தை தீவிரப்படுத்தி வருகிறது. ஆர்க்டிக் (Arctic) பிராந்தியத்தில் ரஷ்யா தனது ஆக்கிரமிப்பைக் காட்டினால் அமெரிக்கா நட்பு நாடுகளை பாதுகாக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு வெளிப்படுத்த அதிபர் ஜோ பிடென் தனது பாணியை வெளிப்படுத்தினார். விமானப்படையைச் சேர்ந்த B-1 bombersகளை அமெரிக்கா, நார்வேக்கு அனுப்புகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரமாண்டமான, ஸ்விங்-விங் குண்டுவீசும் விமானங்கள் (swing-wing bombers) மற்றும் 200 ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அமெரிக்க விமானப்படையின் டெக்சாஸில் உள்ள டைஸ் விமானப்படையைச் சேர்ந்த 200 பேர் நார்வேயில் உள்ள ஆர்லாண்ட் விமானத் தளத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.


மூன்று வாரங்களுக்குள், ஆர்க்டிக் வட்டத்திலும், ரஷ்யாவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து சர்வதேச வான்வெளியிலும் பயணங்கள் தொடங்கும் என்று தெரிகிறது.


 Also Read | யூனிட் 731: இரண்டாம் உலகப்போரின் ரத்தம் தோய்ந்த பக்கங்கள்


"செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் கூட்டாளர்களை ஆதரிப்பதற்கும், வலிமையாய் பதிலளிப்பதற்கும் நம்முடைய திறனை காட்டுவது  ஒருங்கிணைந்த வெற்றிக்கு முக்கியமானது" என்று ஐரோப்பா மற்றும் ஆஃப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க விமானப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெஃப் ஹரிஜியன் கூறுகிறார். "நார்வேயுடனான நீடித்த கூட்டாட்சியை நாங்கள் மதிக்கிறோம், எங்களது கூட்டு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான எதிர்கால வாய்ப்புகளை எதிர்பார்க்கிறோம்" என்று அவர் கூறுகிறார்.


"வழக்கமான செயல்பாட்டு பாதுகாப்பு தரங்களின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட பணிகள் அல்லது நிகழ்வுகளின் எண்ணிக்கை பற்றி விவாதிக்கப்படவில்லை. ஆனால், USEUCOM நோக்கங்களுக்கு ஆதரவாக ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க விமானப்படைகள் முழுவதும் பயன்படுத்தப்படும்.


பி -1 லான்சர் ஸ்க்ராட்ரான் என்பது ஒரு சூப்பர்சோனிக்  ஸ்வீப் பிரிவு ஆகும். அமெரிக்காவின் விமானப்படை பயன்படுத்தும் கனரக குண்டுவீச்சு. இது பொதுவாக "Bone" ("B-One" இலிருந்து) என்று அழைக்கப்படுகிறது. இது 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி அமெரிக்க விமானப்படைக் கடற்படையில் உள்ள மூன்று மூலோபாய குண்டுவீசும் விமானங்களில் ஒன்றாகும். மற்றவை, பி -2 ஸ்பிரிட் மற்றும் பி -52 ஸ்ட்ராடோஃபோர்டிரஸ் (B-52 Stratofortress) ஆகும்.


Also Read | மியான்மாரில் வலுவடையும் மக்கள் போராட்டம்... ஒடுக்க நினைக்கும் ராணுவம்..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR