Rubert Murdoch 5th Marriage: திருமணமும், மறுமணமும் இளவயதினோருக்கு மட்டுமே என்பது பலரின் புரிதலாக இருக்கிறது. குறிப்பாக, 35 வயதை தாண்டியவர்கள் திருமணம் குறித்தோ அல்லது விவாகரத்துக்கு பின் மறுமணம் செய்வது குறித்தோ பேசினால், அது தவறானது என்ற பார்வையிலேயே பார்க்கின்றனர். புகழும், பணமும் படைத்த பிரபலங்கள் கூட 35 வயதுக்கு பின் திருமணம், மறுமணம் குறித்து யோசித்தால் இந்த சமூகம் அவர்களை தூற்றவே நினைக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், காதல், திருமணம், மறுமணம் என எதற்கும் வயது என்பது ஒரு தடையல்ல என பலரும் உதாரணமாக இருந்துள்ளனர். உறவில் சேர்வது ஒருபுறம் என்றால், உறவில் இருந்து வெளியேறுவதும் இயல்பானதாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே பலரின் கருத்தாக மாறியிருக்கிறது. அந்த வகையில், பிரபல ஊடக நிறுவனங்களின் நிறுவனரான ரூபர்ட் முர்டோக் தனது 92ஆவது வயதில் 5ஆவது திருமணம் செய்துகொள்ள உள்ளார். 


பெரும் பிரபலம்


அவரின் செய்தித்தாள் நிறுவனம் மூன்று கண்டங்களில் வெளியாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் பிறந்த ரூபர்ட், Fox News, The Wall Street Journal உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்களை நிறுவியவர். இதன் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் என கூறப்படுகிறது. இந்த ஊடக நிறுவனங்கள் மீதான அனைத்து பொறுப்பையும் அவர் தனது மகன் லாச்லானிடம் கடந்தாண்டு நவம்பர் மாதம் ஒப்படைத்தார். ஏற்கெனவே, நான்கு முறை திருமணம் செய்து விவாகரத்து செய்த ரூபர்ட் தற்போது ஐந்தாவது திருமணத்திற்கு தயாராகி உள்ளார். 


மேலும் படிக்க | போர் முரசு கொட்டும் கிம் ஜாங் உன்! ராணுவத்தை போருக்கு தயாராக உத்தரவு!


முந்தைய திருமணங்கள்...


இவரின் 5ஆவது மனைவியாக ஆகப்போவது யார் என்பதை பார்க்கும் முன்னர், இவரின் முந்தைய மனைவிகள் குறித்து பார்க்கலாம். பட்ரீசியா புக்கர் என்ற ஆஸ்திரேலிய விமான பணிப்பெண்ணை முதல்முறையாக திருமணம் செய்துகொண்டார். 1960களின் பிற்பகுதியில் அவரை பிரிந்த ரூபர்ட், செய்தித்தாள் நிபுணரான அன்னா டோர்வ் என்பவரை திருமணம் செய்து 30 ஆண்டுகள் உறவில் இருந்தார். 


பின்னர், அவருடன் 1999ஆம் ஆண்டு விவாகரத்து ஏற்பட, வெண்டி டெங்க் என்பவரை ரூபர்ட் மணமுடித்தார். பின்னர் அவருடன் 2013ஆம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது. கடைசியாக அவர் பிரபல மாடல் அழகி ஜெர்ரி ஹால் என்பவரை திருமணம் செய்தார். இவருடன் 2022ஆம் ஆண்டு ரூபர்ட் விவாகரத்து செய்தார். 


5ஆவது திருமணம் யாருடன்?


அதன்பின், பிரபல பல் மருத்துவரும், வானொலி நெறியாளருமான அமெரிக்க மாடல் ஆன் லெஸ்லி ஸ்மித் என்பவரை ரூபர்ட் கடந்தாண்டு திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தெரிவித்த நிலையில், கடைசியில் அதில் இருந்து பின்வாங்கினார். ரூபர்டுக்கு மொத்தம் 6 குழந்தைகள் ஆகும். 


இந்நிலையில், தற்போது தனது 5ஆவது திருமணம் குறித்த அறிவிப்பை ரூபர்ட் நேற்று அறிவித்தார். ரஷ்யாவில் இருந்து வந்து அமெரிக்காவில் குடியேறியுள்ள ஓய்வுபெற்ற உயிரியலாளர் எலெனா ஜுகோவா என்பவரை ரூபர்ட் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். வரும் ஜூன் மாதம் தனக்கும் எலெனாவுக்கும் திருமணம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். 67 வயதான எலெனாவுக்கும், ரூபர்ட்டுக்கும் சுமார் கால் நூற்றாண்டு வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பாகிஸ்தானில் பதவியேற்று கொண்ட சீக்கிய அமைச்சர்... யார் அந்த ரமேஷ் சிங் அரோரா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ