Iranian President Ibrahim Raizi Helicopter Crashes: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் மலைகளில் மோதி இன்று விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சரும் இருந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜர்பைஜான் நாட்டின் அருகே உள்ள எல்லைப்பகுதிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அதிபர் சென்ற ஹெலிகாப்டர் பனி மூட்டமாக இருந்த போது மலைத் தொடர்களை கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் ஈரான் அரசு தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மீட்புப் பணிகளில் சுணக்கம்


இந்த விபத்தால் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோரின் உயிருக்கே பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து பகுதியில் இருந்து தகவல்கள் அனைத்தும் அச்சம் கொள்ளத்தக்க வகையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்து நடந்த இடத்தில் மோசமான வானிலை நிலவுவதால் மீட்புப் பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரார்த்தனைகளை ஒளிப்பரப்பும் அரசு சேனல்


அதுமட்டுமின்றி, ஈரான் அரசு சார்ந்த தொலைக்காட்சி மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, இப்ராஹிம் ரைசிக்காக ஈரான் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்களின் பிரார்த்தனைகளை ஒளிப்பரப்பி வருகின்றன. மேலும், தொலைக்காட்சி சேனலின் ஓரத்தில் விபத்து நடந்த மலைப் பிரதேசத்தில் மீட்புப் படை மற்றும் தேடுதல் படையினரின் பணிகளை நேரடியாக ஒளிப்பரப்பி வருகிறது. அந்த பகுதிகள் முழுவதும் பனிமூட்டமாக காணப்படுகிறது.


மேலும் படிக்க | சவுதி அரேபியாவில் பிக்கினி உடையில் வலம் வந்த அழகிகள்... மூக்கில் விரல் வைக்கும் உலக நாடுகள்!


மூன்றில் ஒரு ஹெலிகாப்டர் விபத்து


மொத்தம் மூன்று ஹெலிகாப்டர்கள் அதிபருடன் சென்றதாகவும், அதில் ஒரு ஹெலிகாப்டர்தான் மோசமான விபத்தில் சிக்கியிருப்பதாகவும் உள்துறை அமைச்சர் அகமது வஹிதி, அரசின் தொலைக்காட்சி சேனலில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மேற்கொண்ட தகவல்களுக்கு காத்திருப்பதாகவும் தெரிகிறது. ஈரான் - அஜர்பைஜான் நாடுகள் இணைந்து எல்லைப் பகுதியில் கட்டிய கிஸ்-கலைசி என்றழைக்கப்படும் அணையை திறந்துவைக்கவே இப்ராஹிம் ரைசி அப்பகுதிக்குச் சென்றதாக தெரிகிறது.


2021ஆம் ஆண்டு முதல் அதிபர்


இப்ராஹிம் ரைசிக்கு வயது 63 ஆகும். அவர் 2021ஆம் ஆண்டில் ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டாலும் அதில் அவர் தோல்வியை தழுவினார். அதன்பின் மீண்டும் 2021ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் பதவியேற்றது முதல் அறநெறிச் சட்டங்களை கடுமையாக்க உத்தரவிட்டார்.


உலக வல்லரசு நாடுகளுடன் அணுசக்தி சார்ந்த பேச்சுவார்த்தைகளில் சிரத்தை காட்டினார். ஈரான் நாட்டில் இரட்டை அரசியல் அமைப்பு நிலவுகிறது. மதகுரு ஸ்தாபனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பிளவு ஏற்பட்டால், அனைத்து முக்கியக் கொள்கைகளிலும் இறுதிக் கருத்தைக் கூறுவது மதகுருக்களின் ஸ்தாபனத்தின் தலைவருக்கே இருக்கும். அவருக்கு அதிபரை விட உச்ச அதிகாரம் உள்ளது.


தற்போது அயதுல்லா அலி கமேனி என்பவரே மதகுருக்களின் ஸ்தாபனத்தின் தலைவராக உள்ளார். இவர் இப்ராஹிம் ரைசிக்கு வழிகாட்டியாவார். அயதுல்லா அலி கமேனி, இப்ராஹிம் ரைசியின் கொள்கைகளை வலுவாக ஆதரித்தவர். இருப்பினும், அயதுல்லா அலி கமேனிக்கு இப்ராஹிம் ரைசி ஒரு போட்டியாளராக உருவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | உயிரைப்பறித்த உடலுறவு! விபரீதத்தில் முடிந்த செக்ஸ் விளையாட்டு..பின்னணி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ