வெலிங்டன்: பில் இங்கிலீஷ் நியூசிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்து பிரதமராக தேசிய கட்சி தலைவர் ஜான் கீ கடந்த 8 ஆண்டுகளாக பதவி வகித்தார். இந்த நிலையில் கடந்த வாரம் அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.


இந்த நிலையில் தலைநகர் வெலிங்டனில் உள்ள அரசு இல்லத்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேசிய கட்சியின் கூட்டம் நேற்று நடந்தது. அதில் நிதி மந்திரியாக இருந்த பில் இங்கிலீஷ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அதை தொடர்ந்து நியூசிலாந்தின் புதிய பிரதமராக அவர் பதவி ஏற்றார். மேலும்  துணை பிரதமராக மந்திரி பவுலா பென்னெட் அறிவிக்கப்பட்டார்.