ஹூஸ்டன்: அடுத்த 25 வருடங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அவர்கள் உலகின் முதல் `டிரில்லியனராக’ இருப்பார் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அடுத்த 25 வருடங்களில் அதாவது தனது 86 வயதில் உலகின் முதல் `டிரில்லியனராக’ இருப்பார் என ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 


2009-ம் ஆண்டிலிருந்து பில்கேட்ஸின் சொத்துமதிப்பு வருடத்திற்கு 11 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகிறது. இதன் காரணமாக விரைவில் அவர் உலகின் முதல் `டிரில்லியனராக’ வருவார் என ஆக்ஸ்பாம் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


2006-ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய போது பில்கேட்ஸின் சொத்துமதிப்பு 5,000 கோடி டாலர். 2016-ம் ஆண்டு நிலவரப்படி அவரின் சொத்து மதிப்பு 7,500 கோடி டாலராக அதிகரித்துள்ளது. பில்கேட்ஸ் தனது தொண்டு நிறுவனத்திற்கு மிகப் பெரிய தொகையை கொடுத்த போதிலும் அவரது சொத்து மதிப்பு உயர்ந்து.


உலக அளவில் பில்கேட்ஸ் உட்பட உலகின் 8 பெரும் கோடீஸ்வரர்களிடம் குவிந்துள்ள தொகையானது உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் பேரிடம் குவிந்துள்ள தொகைக்கு இணையாக உள்ளதாக ஆக்ஸ்பாம் சமீபத்தில் அறிக்கை ஒன்றில் வெளியிட்டது.