Bizarre Sex Ghost: அமானுஷ்யமான விஷயங்களான பேய், ஏலியன்கள் போன்றவை மக்களிடம் எப்போதுமே அதிக கவனத்தை பெறுபவை. பேய் மற்றும் ஏலியன்களின் இருப்பு என்பது இதுவரை யாராலும் அறிவியல் ரீதியில் உறுதிசெய்யப்படாத நிலையில், அதனை சுற்றிய பல கட்டுக்கதைகளும், தகவல்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்ட வருகின்றன எனலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆவியுடன் உடலுறவு


ஏலியன்கள் 20ஆம் நூற்றாண்டில் எழுந்த கட்டுக்கதை என்றால் பேய்கள், ஆவிகள் குறித்து பல நூற்றாண்டுகளாக கதைகள் நீண்ட வருகின்றன எனலாம். அந்த வகையில், கொலம்பியாவில் ஒரு பெண்மணி ஆவி உடனான தனது உறவு குறித்து பேசியுள்ளது கதையாகவும் இருக்கலாம். இந்நிலையில், அந்த பெண் விவரித்த சம்பவங்களை இங்கே காணலாம். கொலம்பியா நாட்டை சேர்ந்த பாவ்லா ஃப்ளோரெஸ் என்ற பெண்மணி தான் கடந்த 20 ஆண்டுகாலமாக ஒரு ஆவியுடன் உடலுறவு வைத்துக்கொண்டு காதல் உறவில் இருந்ததாக தற்போது கூறியுள்ளார். அதாவது தனது இளம் வயதில் இருந்து, 20 வருடங்களாக இது நடக்கிறது என அந்த பெண்மணி கூறுகிறார். மேலும், எப்போதும் உடலுறவின்போது, அந்த ஆவி தான் முதலில் தொடங்கும் எனவும் அந்த பெண்மணி கூறியுள்ளார். இவை அனைத்தும் விட அந்த பெண்மணி அடுத்த கூறியதுதான் இன்னும் விசித்திரமான ஒன்றாகும். 


மேலும் படிக்க | மனைவியிடம் தாய் பால் குடிக்கும் கணவன்... நன்மைகள் கொட்டி கிடக்குதாம்.. இது நல்லா இருக்கே!


20 ஆண்டு கால உறவு


20 ஆண்டுகளுக்கு பின் அந்த ஆவி அதன் முகத்தை காண்பித்த பின், அதன் கொடூரமான உருவத்தை பார்த்தபின் அதனுடனான உறவை முறித்துக்கொண்டதாக பாவ்லா கூறியுள்ளார். அமானுஷ்ய ஆவியை ஆத்மார்த்தமாக காதலித்ததாக கூறும் அந்த பெண், ஆவியின் முகத்தை பார்த்ததும் காதலை முறித்துக்கொண்டதாக கூறினார். 


கோரைப்பற்களுடன் ஒரு கொடூரமான பெரிய ஆண் உருவமாக அது இருந்தது என அந்த ஆவியை பாவ்லா விவரத்தார். மேலும், அதன் உருவத்தை பார்த்த பின்னர் அதனுடன் தொடர்பே வைத்துக்கொள்ள கூடாது என தான் முடிவெடுத்துவிட்டதாகவும் அந்த பெண் தெரிவித்தார். இது பலராலும் நம்ப முடியாத ஒன்றாக இருந்தாலும், இதனை அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதனை ரசித்ததாகவும் ஒப்புக்கொண்டார்


கொலம்பியாவைச் சேர்ந்த அந்த பெண், அரசுக்கு சொந்தமான சேனல் 1 தொலைக்காட்சியில் சின் கரேட்டா என்ற நிகழ்ச்சியில் அவரது இந்த 'காதல் கதை'-ஐ பகிர்ந்து கொண்டார். அங்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ஜுவான் டியாகோ அல்விராவிடம், ஆவியுடனான உறவு எவ்வாறு தொடங்கியது என்று அந்த பெண் விளக்கினார். 


"ஒரு நாள், நான் படுத்திருந்தபோது, ​​என் காலில் இருந்து என் மார்புக்கு ஒரு கை நகர்வதை உணர்ந்தேன். அது விசித்திரமாக இருந்தது, எனக்கு பயமாக இருந்தது. அந்த நிமிடத்தில் இருந்து, அவர் என்னுடன் உடலுறவு கொள்ள ஒரு ஆவி போல என்னிடம் வரத் தொடங்கினார்," என்றார். ஒவ்வொரு இரவும் அதனை தான் ரசித்ததாகவும் அந்த பெண் ஒப்புக்கொண்டார். "நான் அவரது முகத்தை ஒரு வழியாக பார்த்தேன், அதன்பின் நான் தொடர விரும்பவில்லை" என்றார்.


உண்மையாகவும் இருக்கலாம்.


உளவியலாளர் Martiza Montealegre என்பவர் பாவ்லா விவரிக்கும் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், "இது பொதுவானது இல்லை" என்று கூறுகிறார். குறிப்பாக, "உண்மையில், பேய் சார்ந்த விஷயங்கள் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டவை" என்றார். இருப்பினும், மாற்று மனநல நிபுணரான (parapsychologist) ஜெய்ரோ உர்பெக்ஸ் என்பவர் கூறுகையில், பாவ்லா சொல்வது நம்பகமானது என்று அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அந்த பெண் ஒரு "இன்குபஸ்" உடன் உறவில் இருந்திருக்கலாம் என்றும் கூறினார். இன்குபஸ் என்பது அவர்களின் நாட்டுப்புற கதைகளின்படி பெண்களிடம் இரவில் உறவு வைத்துக்கொள்ளும் ஒரு பேய் ஆகும். 


மேலும் படிக்க | மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி... காதலிக்கு 10 நிமிடம் விடாமல் கிஸ் கொடுத்தவருக்கு காது செவிடானது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ