இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பரிமணியசாமி சந்திப்பு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை சென்றுள்ள பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அவர்கள் மடமுலனாவில் உள்ள ராஜபக்சே அவர்களின் முன்னோர்கள் இல்லத்திற்கு சென்று ராஜபக்சே அவர்களை சந்தித்து பேசினார். 



இச்சந்திப்பில் சுப்பிரமணியசாமி அவர்கள், ராஜபக்சே அவர்களை டெல்லிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தாக தெரிகிறது. மேலும், மறைந்த சந்திர ராஜபக்சேவின் (ராஜபக்சேவின் இளைய சகோதர) இறுதிச் சடங்கு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். 



இச்சந்திப்பினை குறித்து சுப்பிரமணியசாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... ‘‘இலங்கையின் தென்பகுதிக்கு சென்று முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து பேசினேன். இச்சந்திப்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவது என உறுதியான முடிவை எடுத்தவர் என்ற வகையில் அவர் பாராட்டுக்குரியவர். அதேபோல் ராஜீவ் காந்தி அவர்களை விடுதலைப்புலிகள் படுகொலை செய்ததால் இந்தியர்கள் கொண்டிருந்த மிகுந்த வேதனையை தணித்தவரும் இவரே’’ என்று குறிப்பிட்டுள்ளார்.