கராச்சி: பாகிஸ்தானில்சுபி கோவிலில் குண்டு வெடித்து 52 உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பு கூறியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் லஸ்பெல்லா மாவட்டத்தில் தர்கா ஷா நூரணி என்ற பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலம் உள்ளது. நேற்று மாலை திடீரென பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் சுமார் 52 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். 


இவ்விபத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கலுக்கு கராச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  


குண்டு வெடிப்பு நடந்த இடம் மலைப்பகுதியானது. உயிரிழப்பு அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. குண்டு வெடிப்புக்கு  ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் அதிமானோர் சிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.