பாகிஸ்தான் குவெட்டா நகரில் குண்டு வெடிப்பு: 32 பேர் பலி
பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் குண்டு வெடித்ததில் 32 பேர் உயிரிழப்பு - 40 பேர் படுகாயம்!!
பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் குண்டு வெடித்ததில் 32 பேர் உயிரிழப்பு - 40 பேர் படுகாயம்!!
இன்று நடைபெறும் பாகிஸ்தான் பொதுத்தேர்தலை உலக நாடுகளை அதிக கவனமாக கவனித்து வருகிறது. ஏனெனில் கடந்த 2013 ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி என் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் பிரதமராக தேர்ந்தெடுக்கபட்டார். ஆனால் இந்த முறை நவாஸ் ஷெரிப் சிறையில் உள்ளார். இதனால் இந்த தேர்தல் முக்கிய கவனம் பெற்றுள்ளது.
இரண்டாவது முறையாக ஆட்சி பிடிக்க வேண்டும் என நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியும், முதல் முறையாக ஆட்சி கட்டிலில் அமர பாகிஸ்தான் முன்னால் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியும் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டனர்.
இந்த இரண்டு கட்சிக்கும் நேரடியாகவே பலத்த போட்டி ஏற்பட்டு உள்ளது. நவாஸ் ஷெரிப் சிறை சென்றுள்ளதால், பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அவருடைய சகோதரர் ஷெபஸ் ஷெரிப்பை முன்னிறுத்தி உள்ளனர். இந்த இரண்டு கட்சியை அடுத்து, அதிக பேசப்படும் இன்னொரு கட்சி பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி. இந்த கட்சியும் நாடு முழுவதும் பிரசாரத்தை மேற்கொண்டது.
இம்முறை பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பழங்குடியினரருக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது என்பது சிறப்பு. இன்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பலுசிஸ்தானின் கிழக்கு பைபாஸ் பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் பலியாகி உள்ளனர். 40-க்கும் பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைபர் - பக்துன்கவா பகுதியில் ஓட்டுச்சாவடி அருகே நவாஸ் மற்றும் இம்ரான் ஆதரவாளர்கள் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் பலியாகி உள்ளார். இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த 2 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.