நியூ டெல்லி: இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்கா புளோரிடாவில் ஒரு பெரிய விமான விபத்து ஏற்ப்பட இருந்ததை தடுக்கப்பட்டு உள்ளது. பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் புளோரிடா நதியில் விழுந்தது. இந்த விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் 136 பயணிகளும் இருந்ததாக செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஜாக்சன்வில்லேவில் அமைந்துள்ள ஏர் ஸ்டேஷன் விமான நிலைய அதிகாரிகள் இந்த விபத்தில் எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. ஏதாவது உயிர் பலியாகி உள்ளதா என்ற தகவல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் படி, குவாண்டநாமோ விமான நிலையத்திலிருந்து புளோரிடாவுக்கு வந்த விமானம் அங்கு தரையிறங்கியது. அதன் பின்னர் அங்கிருந்து பறந்து சென்ற போது அருகிலுள்ள செயிண்ட் ஜான்ஸ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. ராய்ட்டர்ஸ் படி இந்த சம்பவத்தில் குறைந்தபட்சம் இரண்டு பயணிகளுக்கு காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிகின்றன என கூறியுள்ளது.


ஏற்கனவே இந்தியா சீனா உள்ளிட்ட 8 நாடுகளில் போயிங் விமானம் பறக்க தடை விதித்துள்ள நிலையில், போயிங் 737 விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகி வருகின்றன குறிப்பிடத்தக்கது.