பிரேசில் நாட்டில் உள்ள ஒரு பெண்மனி சமீபத்தில் 7.3 கிலோ எடையுடன் குழந்தையைப் பெற்றெடுத்தார். அங்கர்சன் சாண்டோஸ் என பெயரிடப்பட்ட அக்குழந்தை அறுவை சிகிச்சை மூலம் அமேசானாஸ் மாகாணத்தில் உள்ள பார்ண்டின்ஸ் பகுதியின் மருத்துவமனையில் பிரசவிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2016இல் 6.8 கிலோ எடையில் பிறந்த பெண் குழந்தையை, அங்கர்சன் சாண்டோஸ் மிஞ்சியுள்ளது. எனினும், 1955இல் இத்தாலியில் பிறந்த 10.2 கிலோ எடையில் பிறந்த பெண் குழந்தை அவரால் நெருங்க முடியவில்லை என கூறப்படுகிறது. தற்போது, பெண் குழந்தை அங்கர்சனும், அவரின் தாயும் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கர்சன் பிறக்கும்போதே அதன் கை அளவிற்கு, 2 அடி உயரத்தில் பிறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | புது காதலியுடன் பப்பிற்கு செல்ல... குழந்தையை அலெக்ஸாவுடன் விட்டுசென்ற தந்தை - ஓராண்டு சிறை


சராசரியாக, ஒரு ஆண் குழந்தையின் எடை 3.3 கிலோவாக இருக்கும் என்றும் பெண் குழந்தையின் எடை 3.2 கிலோவாக இருக்கும் என மருத்துவத்துறையில் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அங்கர்சன் போன்று அதிக எடையில் பிறக்கும் குழந்தைகளை மேக்ரோசோமியா (கிரேக்க மொழியில் பெரிய உடல் என பொருள்) என அழைக்கப்படுகிறது. 


அதாவது, 4 கிலோவை தாண்டி பிறக்கும் குழந்தைகளை பொதுவாக மேக்ரோசோமியா என்று மருத்துவ ரீதியில் அழைக்கின்றனர். மேக்ரோசோமியா கொண்ட குழந்தைகள், சுமார் 12 சதவீத பிறப்பின் காரணமாக வருவதாக கூறப்படுகிறது. . 


கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களில் (கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் இரத்த சர்க்கரை நோய்), இதுபோன்ற குழந்தைகளின் பிறப்புகளில் 15 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை வாய்ப்பை அதிகரிக்கிறது என மருத்துவ ரீதியில் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அச்சப்பட தேவையில்லை என்றும், மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்றும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


மேலும் படிக்க | Radioactive Danger: கதிரியக்க காப்ஸ்யூல் கிடைச்சிடுச்சு! நிம்மதி பெருமூச்சுவிடும் ஆஸ்திரேலியா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ