புதுடெல்லி: பிரேசில் அதிபர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், அவரது மனைவியும் நாட்டின் முதல் பெண்மணி Michelle Bolsonaroவுக்கு கொரோனா பாதித்துள்ளது. தற்போது மிக்கேல் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும், கொரோனா பரிசோதனையில் அவருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் சிறிது பலவீனமாக இருப்பதாக உணர்கிறார், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் ரத்த பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, பிரேசிலின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மார்கோஸ் பொன்டெஸ் (Marcos Pontes) கொரோனாவால் பாதிக்கபப்ட்டுள்ளார்.  


கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது பிரேசிலிய அமைச்சர் Marcos Pontes என்பது குறிப்பிடத்தகக்து. முன்னதாக ஜூலை 7 ம் தேதி Jair Bolsonaroவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அவர் அறிவித்திருந்தார். தற்போது அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டார்.   


பிரேசில் அதிபரின் செய்தித் தொடர்பு அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.  அதில் அதிபரின் மனைவியும், நாட்டின் முதல் பெண்மணியுமான மிக்கேல் போல்சனாரோவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மிக்கேல் ஆரோக்கியமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.