9 மனைவிகள் பத்தலையாம்... 10வதும் வேணுமாம்! அடம்பிடிக்கும் பிரபலம்!
9 மனைவிகளுடன் பலதாரமண உறவில் இருக்கும் ஒருவர் தனது வாழ்க்கை முறை குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஒரு சிலரின் காதல் உறவுகள், திருமண உறவுகள் உள்ளிட்டவை வினோதமாக இருக்கலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்று ஆரம்பித்து, ஒரு பெண்ணுக்கு பத்து பேர் என்பது வரை உறவுமுறைகள் காணப்படுகிறது. இவை குறித்து கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும், அவை அனைத்தும் அவர்களின் தேர்வுப்படியே அமைகிறது.
அந்த வகையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் ஒருவரின் உறவுமுறை, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுவரை 9 பெண்களை திருமணம் செய்துள்ள அந்த பிரபலம், கூடிய விரைவில் ஒருவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும், அதற்கடுத்து மொத்தம் 10 மனைவிகள் வரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆர்தர் ஓ உர்சோ என்ற அந்த பிரபலம் பலதாரமண (Polygamous Relationship) உறவில் இருந்து வருகிறார். முதல் மனைவி லுவானா கசாகி என்பவருக்கு பிறகு, தொடர்ந்து 8 இணையர்களை அவர் மணமுடித்துள்ளார்.
சுதந்திரமான காதலை கொண்டாடுவதற்குதான் இந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்ததாக உர்சோ தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் ஒற்றுமை வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அதில் விரிசல் விழுந்துள்ளது. விரைவில், அவரின் மனைவிகளுள் ஒருவரான அகதா என்பவரை விவாகரத்து செய்ய உள்ளதாக ஆர்தர் முடிவெடுத்துள்ளார்.
மேலும் படிக்க | 9ஆவது குழந்தை வரப்போகுது... அதனால் இன்னொரு பொண்ணு வேணும் - அடம்பிடிக்கும் பிரபலம்
அகதா தன்னை ஒருதார மண உறவுக்கு வற்புறுத்தியதாகவும், அகதா உடன் மட்டும் மண உறவில் இருக்க கூறியதாகவும் ஆர்தர் தெரிவித்தார். இதனாலேயே, இரண்டு ஆண்டுகளாக மணஉறவில் இருந்த அகதாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.
விவாகரத்து குறித்து ஆர்தர் கூறுகையில்,"அகதா என்னை முழுவதுமாக சொந்தம் கொண்டாட விரும்பினாள். இதில் எந்த அர்த்தமும் இல்லை. நாம் பகிர்ந்துதான் வாழ வேண்டும் என கூறுகிறேன். நான் அகதாவை பிரிவதைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறேன். மேலும் அகதா கூறிய சாக்குப்போக்கால் ஆச்சரியப்பட்டேன்.
அகதாவின் தேவைகள் அவரது மற்ற மனைவிகளுடனான உறவில் சிக்கல்களை ஏற்படுத்தியது. எனது மற்ற மனைவிகள் அகதாவின் அணுகுமுறை தவறானது என்று நினைக்கிறார்கள். மேலும் அவர் ஒருவித சாகசதிற்காகவே திருமணம் செய்து கொண்டார் என்றும் உண்மையான உணர்வுகளுக்காக அல்ல என்றும் மற்ற மனைவிகள் நினைக்கின்றனர்" என்றார்.
மேலும், தனக்கு மொத்தம் 10 மனைவிகள் வரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அனைவருடனும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆர்தர் தனது ஆசையை வெளிக்காட்டியுள்ளார்.
"எனக்கு ஒரு கற்பனை உண்டு; எப்பவுமே பத்து திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன். எனக்கு ஒரு பெண் குழந்தைதான் உள்ளது. இருந்தாலும் எல்லா மனைவிகளுடனும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. அனைவரின் மீது ஒரே அளவான அன்புதான் வைத்துள்ளேன். அதனால், ஓரீருவருடன் மட்டும் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது அநீதியானதாக தோன்றுகிறது" என்றார்.
மேலும் படிக்க | தந்தைக்கு உல்லாச அழகிகளை விருந்தாக்கிய மகள்... 100ஆவது பிறந்தநாளுக்கு பரிசு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ