133 யணிகளுடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானது. இதனால், தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான தெங்சியன் கவுண்டி என்னும் மலைப்பகுதி தீ பிடித்துள்ளது; உயிரிழப்புகள் குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனா ஈஸ்டர்ன் போயிங் 737 விமானம் தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான டெங்சியன் கவுண்டி என்னும் விமானம் விபத்துக்குள்ளான மலைப் பகுதியில் பெரும் தீயை ஏற்படுத்தியது.


குவாங்சூவிலிருந்து குன்மிங்கிற்கு சென்று கொண்டிருந்த MU5736 என்ற விமானம், மதியம் 13.11 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. விமானம் மாலை 15.05 மணிக்கு தரையிறங்குவதாக இருந்தது.


தென் மேற்கு சீனாவில் 133 பேருடன் சென்ற சைனா ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதாக உள்நாட்டு தொலைக்காட்சி CCTV செய்தி வெளியிட்டுள்ளது.


போயிங் 737 விமானம் குவாங்சி பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள கிராமப்புற பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாதால், விமானம் விழுந்து நொறுங்கிய  மலை ப்பகுதியில் தீயை மூண்டுள்ளதாகவும், மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.



2018 ஆம் ஆண்டில், போயிங் 737 மேக்ஸ் (Max) விமானங்களை இயக்கும் லயன் ஏர் விமானம் 610 என்ற விமானம் விபத்துக்குள்ளானது. மேலும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் மற்றொரு 737 மேக்ஸ் விமானம் 2019 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளானது. இரண்டு விமான விபத்து சம்பவங்களைத் தொடர்ந்து அனைத்து போயிங் 737 MAX பயணிகள் விமானங்கள் திரும்ப பெறப்பட்டன.


இருப்பினும், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் விமானம் வழக்கமான போயிங் 737-89P விமனாம் என்றும், இது  மேக்ஸ் வகையை சேர்ந்தது அல்ல எனவும் கூறப்படுகிறது. விபத்திற்குள்ளான விமானம், 6 ஆண்டுகள் பழமையானது என விமான கண்காணிப்பு இணையதளமான ஃப்ளைட் ராடார் 24  வழங்கிய தரவுகள் கூறுகின்றன.


மேலும் படிக்க | டெல்லி-தோஹா விமானம் QR579 கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR